For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வுக்கு மக்களை காட்டிலும் அரசியல் முக்கியமோ?- நடிகை 'குத்து' ரம்யா

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய நடிகையும், காங்கிரஸ் எம்.பி.யுமான ரம்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நடிகை 'குத்து' ரம்யா கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் இருந்து லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பி. ஆவார். அவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

விடுதலை

விடுதலை

இந்த கொலையாளிகள் ராஜீவ் காந்தியை மட்டும் அல்ல ஏராளமான மக்களையும் கொன்றுள்ளனர். அவர்கள் எப்படி விடுதலை செய்யப்படலாம்? என்று ரம்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

அநீதி

அநீதி

ராஜீவ் காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவருடன் சேர்த்து தமிழர்களும் கொல்லப்பட்டனர் என்பது அவருக்கு(ஜெயலலிதாவுக்கு) தெரிய வேண்டும். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இது அநீதி ஆகும்.

மன்னிக்குமா?

மன்னிக்குமா?

அவர்(ஜெயலலிதா) வேண்டும் ஆனால் அதை அரசியல் நோக்கத்துடன் செய்யலாம். ஆனால் தமிழர்களும் பலியாகியதை அவர் மறந்துவிட்டார். அவர்களின் குடும்பங்கள் மன்னிக்குமா?

கொலையாளிகள்

கொலையாளிகள்

இது ராஜீவ் காந்தியின் கொலையாளிகள் பற்றி இல்லை. இது விடுதலையாகப் போகும் கொலையாளிகள் பற்றி. போன உயர்கள் போனது தான். அபாயகரமான அரசியல்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

தமிழர்களை கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்வதன் மூலம் ஜெயலலிதா என்ன சொல்ல வருகிறார்? உங்களுக்கு மக்களை காட்டிலும் அரசியல் முக்கியம்?

உயிர்

உயிர்

ஒரு தமிழர் இலங்கை மண்ணிலோ அல்லது இந்திய மண்ணிலோ கொல்லப்பட்டால் உயிர் உயிர் தான் என்று ரம்யா ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

English summary
Actress cum congress MP Ramya has criticised CM Jayalalithaa for releasing all seven convicts in the Rajiv Gandhi assassination case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X