ஆந்திராவில் ஜெய்பீம் குறித்து பேசிய நீதிபதி சந்துரு.. ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீதும் புகார்!
விஜயவாடா: நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் வெளியானது. நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரித்து, ஞானவேல் இயக்கியுள்ள இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது ஒதுக்கப்பட்ட இருளர் சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் கதாநாயகன் அவர்களுக்கு நீதி பெற்று தருவதே படத்தின் கதை.
உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் நிஜ நாயகன் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு ஆவார். 1993-ல் அவர் வழக்கறிஞராக இருந்தபோது, இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக அவர் நடத்திய சட்டப் போராட்டத்தின் அடிப்படையில்தான் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

நிஜ நாயகன் நீதிபதி சந்துரு
1993--ம் ஆண்டில் கடலூர் அருகே உள்ள முதனை கிராமத்தில் நிகழ்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கு தான் படத்தின் கதை, நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது இந்த கொலையை ஏற்று நடத்தினார். தனக்கு வந்த மிரட்டல்களை எல்லாம் தகர்த்தெறிந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2006-ல் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு நீதி வழங்கி கொடுத்தார் நீதிபதி சந்துரு.

ஜெய்பீம் படம்
இந்த நிலையில் உலக மனித உரிமைகள் தினத்தையொட்டி ஆந்திராவில் பெஸ்வாடா பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் உரையாற்றிய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை துன்புறுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார். முன்னதாக ஜெய்பீம் படம் குறித்து பேசிய அவர் நான் ஜெயபீம் வழக்குபோல் பல வழக்குகளை விசாரித்துள்ளேன்.

பிழைப்புக்காக போராடுகிறது
ஆனால் இந்த வழக்கில் உள்ள வித்தியாசம் என்னவென்றால் அந்த இருளர் பெண்ணுக்குரிய நீதியை, உண்மையை நீதிமன்றத்தில் கொண்டு சென்று நிலைநாட்டியது தான். ஜெய்பீம் எந்த ஹீரோசத்தையோ கொண்டுள்ளது கிடையாது. நீதிக்காக போராடும் மனிதனின் போராட்டம்தான் அது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:- தற்போதைய சூழ்நிலையில் ஆந்திர அரசு தனது பிழைப்புக்காக போராடுகிறது. அமராவதியில் நில மோசடி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட எஃப்ஐஆரை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏனெனில் அங்கு நீதிபதிகள் கடந்த அரசு மூலம் வீட்டு மனைகளின் பலன்களைப் பெற்றுள்ளனர்.

மிகவும் துரதிர்ஷ்டவசமானது
நீதிபதிகளும் பயனாளிகள் என்பதால் அந்த வழக்குகளை விசாரித்திருக்கக் கூடாது. அதனால்தான் அவர்கள் ஆந்திர அரசின் எஃப்ஐஆரை ரத்து செய்துவிட்டனர். ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்துவிடுவோம் என அச்சுறுத்துகிறார்கள், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என்று நீதிபதி சந்துரு கூறினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications