மோடி, சோனியா தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு - 7வது கட்டத் தேர்தல் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 7வது கட்ட லோக்சபா தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் உள்பட 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
குஜராத், பஞ்சாப், உ.பி, பீகார், மேற்கு வங்கம், தெலுங்கானா உள்பட மொத்தம் 7 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதுவரை 6 கட்டமாக 349 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பலத்த பாதுகாப்புடன் முக்கிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றைய வாக்குப்பதிவில் மோடி போட்டியிடும் வதோதரா, சோனியா போட்டியிடும் ரேபரேலி ஆகியவை முக்கியமான தொகுதிகளாகும்.












Click it and Unblock the Notifications