மும்பையில் எஸ்.பி.ஐ. வங்கிப் பணம் ரூ1.5 கோடி கொள்ளை.. 4 பேர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தாராவியில் எஸ்.பி.ஐ. வங்கி வேனில் இருந்து ரூ.1.5 கோடி பணத்தை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் தாராவியில் எஸ்.பி.ஐ. வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு சொந்தமான பணத்தை ஏற்றிக் கொண்டு சென்ற வேனில் இருந்து ரூ 1.5 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

Rs 1.5 crore looted from bank cash in Mumbai

நேற்று மதியம் 3 மணி அளவில் ஒரு ஏடிஎம் முன் நிறுத்தி பணத்தை நிரப்பியபோது, வேனில் இருந்த பணத்தை 4 பேர் கும்பல் கொள்ளை அடித்துச் சென்றதாக தெரிகிறது. சிசிடிவி காமிராவில் இந்தக் காட்சிகள் பதிவாகி உள்ளன. அதை வைத்து போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rs 1.5 crore cash was looted in Mumbai on Thursday.
Please Wait while comments are loading...