For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.50,000 கோடி.. பணமதிப்பிழப்பு பாதிப்புக்கு பிறகு மத்திய அரசுக்கு ஒரு நிம்மதி தகவல்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ரிசர்வ் வங்கியின் சட்டப்படி சொத்துக்களின் தேய்மானம், வாராக்கடன் ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட சில செலவீனங்களுக்கு பிறகு எஞ்சிய லாபத்தை மத்திய அரசுக்கு தர வேண்டும். இதன்படி 2018-19ம் நிதியாண்டுக்கு 50 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

இதன் மூலம் மத்திய அரசு நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது. ஏனெனில் கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி 30 ஆயிரத்து 659 கோடிகளை மட்டுமே மத்திய அரசுக்கு அளித்தது. ஆனால் அதற்கு முந்தைய நிதி ஆண்டான 2016-17ல் ரிசர்வ் வங்கி 66 ஆயிரத்து 876 கோடியை மத்திய அரசுக்கு வழங்கி இருந்தது.

Rs 50,000 crore From RBI to Modi government this year

இதன்படி, கடந்த நிதி ஆண்டில் இதில் பாதி தொகை தான் மத்திய அரசுக்கு கிடைத்தது. 2011-12 ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட மிகக் குறைவான பங்குத்தொகை அதுவாகும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்து. அதன் விளைவாக புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது, கூடுதல் பணத்தை இருப்பு வைப்பது, போன்றவற்றால் ரிசர்வ் வங்கி கூடுதலாக செலவானது தான் கடந்த ஆண்டு பங்கு தொகையை குறைந்ததற்கு காரணம், என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

83 வருட வரலாற்றில் 2015-16ம் நிதியாண்டில்தான் ரிசர்வ் வங்கி அதிகபட்ச பங்கு தொகையை மத்திய அரசுக்கு வழங்கி இருந்தது. அந்த நிதி ஆண்டில் 66 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு வழங்கியது ரிசர்வ் வங்கி. ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், இந்த பங்குத் தொகையில் பெரும் சரிவை சந்தித்தது மத்திய அரசு.

English summary
The Reserve Bank of India (RBI) on Wednesday approved the transfer of the surplus amount of Rs 50,000 crore for the year ended June 30, 2018, to the Government of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X