For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'காஷ்மீரிகள் இந்தியர்களாக உணர்வதில்லை.. அதற்கு நாம் இதை செய்ய வேண்டும்..' மோகன் பகவத்தின் ஐடியா

Google Oneindia Tamil News

நாக்பூர்: சட்டப்பிரிவு 370 நீக்கம் என்பது காஷ்மீருக்கான தடைகளை நீக்கியிருக்கலாம் என்று தெரிவித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அதேநேரம் காஷ்மீர் மக்களை நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், காஷ்மீர் மக்கள் இந்தியர்களாக உணர்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளார். அங்கு நாக்பூர் நகரில் காஷ்மீர் மற்றும் சட்டப்பிரிவு 370 நீக்கம் ஆகியவை குறித்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

கேரளாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி.. இன்று மிக அதிக கனமழை! கேரளாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி.. இன்று மிக அதிக கனமழை!

அப்போது பேசிய அவர் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு முன்பு வரை, மத்திய அரசின் காஷ்மீர் மக்களுக்குக் கொடுக்கும் நிதியில் சுமார் 80% காஷ்மீர் அரசியல்வாதிகளின் பாக்கெட்களுக்கே சென்றதாகக் குறிப்பிட்டார்.

சட்டப்பிரிவு நீக்கம்

சட்டப்பிரிவு நீக்கம்

காஷ்மீர் மற்றும் சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பாக நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய அவர், "தற்போதைய அரசு சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (A) ஆகியவற்றை ரத்து செய்து துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதைச் செய்ய முடியும் என யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, அதன் பிறகு முறையான நடவடிக்கைகள் மூலமே இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது, காஷ்மீர் மக்கள் இதனால் ஏற்பட்ட ​​வளர்ச்சியை பார்க்கத் தொடங்கியுள்ளனர். சட்டப்பிரிவு 370 ஆபத்தானது இல்லை. ஆனால் அதை உருவாக்கியது ஆபத்தான நடவடிக்கை.

இந்தியர்களாக உணர்வதில்லை

இந்தியர்களாக உணர்வதில்லை

ஆனால் இன்னும் கூட காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மக்களில் சிலர், தனிநாடு வேண்டும் என்று கூறி வருகின்றனர். காஷ்மீர் மக்களுக்கு தாங்கள் இந்தியர்கள் என்ற உணர்வு சுத்தமாக இல்லை. இதனால் தான் அவர்கள் தனிநாடு கோருகிறார்கள். அவர்களை இந்தியர்களாக நாம் உணர வைக்க வேண்டும் மேலும், இந்தியா இல்லை என்றால் நாம் இருக்க மாட்டோம் என்பதையும் புரிய வைக்க வேண்டும். எனவே அவர்களை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கத் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். உடலின் அனைத்து பாகங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதைப் போல நமது நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு நாம் அவர்களிடம் நாட்டுப் பற்றை ஊட்ட வேண்டும்.

ஊழல் அரசியல்வாதிகள்

ஊழல் அரசியல்வாதிகள்

சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு முன்பு வரை மத்திய அரசு காஷ்மீர் மக்களுக்குக் கொடுக்கும் நிதியில் சுமார் 80% காஷ்மீர் அரசியல்வாதிகளின் பாக்கெட்களுக்கே சென்றது. அவர்கள் மக்களைப் பார்க்கக் கூட இல்லை. ஆனால் இப்போது தான் காஷ்மீர் மக்கள் உண்மையான வளர்ச்சியை அனுபவிக்கிறார்கள். காஷ்மீரில் ஊழல் தலைவர்கள் சிறைக்குச் சென்றது மக்களுக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    Kargil | Pak சதியை முறியடித்த Indian Army | Atal Bihari Vajpayee | Oneindia Tamil
    வளர்ச்சிக்கான விதை

    வளர்ச்சிக்கான விதை

    நான் சமீபத்தில் கூட காஷ்மீர் சென்றிருந்தேன். சட்டப்பிரிவு 370 நீக்கம் என்பது அங்கு வளர்ச்சிக்கான விதையைப் போட்டுள்ளது. வளர்ச்சிக்கான கதவு அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 370 இருக்கும் வரை அதற்கு எதிராகத் தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டது" என்று அவர் தெரிவித்தார். கடந்த 2019இல் மக்களவை தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் - ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.

    English summary
    RSS chief Mohan Bhagwat's latest speech about Jammu and Kashmir. Mohan Bhagwat about Kashmir and development.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X