For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி சர்க்காரை நாங்க கண்ட்ரோல் பண்ணலை: இது ஆர்.எஸ்.எஸ்.

By Mathi
Google Oneindia Tamil News

லூதியானா: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை தங்களது இயக்கம் கட்டுப்படுத்தவோ வழிநடத்தவோ இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைமை செய்தித் தொடர்பாளர் மன்மோகன் வைத்யா கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

லோக்சபா தேர்தலின் போது மத்தியில் தேசியவாத அரசு அமைய வேண்டும் என்பதற்காக பாஜகவை நாங்கள் ஆதரித்தோம். தற்போது எங்கள் இயக்கம் மோடி தலைமையிலான அரசுக்கு வழிகாட்டவோ கட்டுப்படுத்தவோ இல்லை.

RSS is not controlling Narendra Modi government: Manmohan Vaidya

தற்போது ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தனது வழக்கமான செயல்பாடுகளுக்கு திரும்பியுள்ளது. மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு தனது ஆட்சித் திறமையையை வெளிப்படுத்த ஒரு ஆண்டு காலம் அவகாசத்தை அளித்திருக்கிறோம். அதன் பின்னர் எங்கள் கருத்தைத் தெரிவிப்போம்.

பொதுவாக மதமாற்றத்தைத் தடுக்க இந்து சமூகத்தில் பலவீனமான நிலையில் இருப்பவர்களுடன் கலந்து பேசுவது மிகவும் முதன்மையான பணி.

இவ்வாறு மன்மோகன் வைத்யா கூறினார்.

English summary
The RSS said it will not act as a guiding or controlling force for the Narendra Modi dispensation and had campaigned during the Lok Sabha polls to ensure a "nationalistic" government at the Centre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X