For Daily Alerts
Just In
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16ம் தேதி திறப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைகளுக்காக வருகிற 16ம் தேதி நடை திறக்கப்படுகிறது.
சபரிமலையிலுள்ள புகழ்பெற்ற சுவாமி ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜை விஷேசமாகும். இதையொட்டி வரும் 16ம்தேதி, புதன்கிழமை, மாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தந்திரி மகேஷ்மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி கோவிலில் நடையை திறந்து வைத்து திருவிளக்கு ஏற்றுகிறார்.

இதைதொடர்ந்து, சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்படும். மறுநாள், வியாழக்கிழமை முதல், சுவாமி ஐயப்பனுக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
21ம் தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். அதன் பிறகு நிறை புத்தரிசி பூஜையையொட்டி இம்மாதம் 30ம் தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். இவ்வாறு சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.