குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்த சச்சின்... தேவஸ்தானம் வரவேற்பு - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர விளையாட்டு வீரருமான சச்சின் தன் மனைவி, மக்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அதற்கு முன்பாக ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Sachin had come Tirupati for praying Lord Venketeswara

இதனையடுத்து, திருப்பதி ஏழுமையானை தரிசிக்க வந்த அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் சிறப்புப் பிரசாதமும் வழங்கப்பட்டது.

ஏழுமலையானை வழிபட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சச்சின், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வாழ்த்துவதாகவும், உலக சாதனை நிகழ்த்திய மித்தாலி ராஜை தனிப்பட்ட முறையில் போனில் கூப்பிட்டு வாழ்த்தியதாகவும் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sachin had come Tirupati for praying Lord Venketeswara and he told he congratulate Indian woman cricket team and Mittaly Raj
Please Wait while comments are loading...