For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2014ல் ஐ.டி. துறையினருக்கு 10% தான் ஊதிய உயர்வாம்!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: 2014ம் ஆண்டில் இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் தான் ஊதிய உயர்வு கிடைக்கும் என்று ஏயான் ஹெவிட் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

2014ம் ஆண்டில் இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் என்று ஏயான் ஹெவிட் நிறுவனம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் 565 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்த கணக்கெடுப்பின் முடிவுகளை பார்ப்போம்.

மிகவும் குறைவு

மிகவும் குறைவு

இந்த ஆண்டு ஊழியர்களுக்கு 10 சதவீதம் தான் ஊதிய உயர்வு கிடைக்குமாம். இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான சதவீதம் ஆகும்.

ஐ.டி.

ஐ.டி.

ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த ஆண்டு 10.2 சதவீதம் தான் ஊதிய உயர்வு கிடைக்குமாம். கடந்த ஆண்டே உரிய ஊதிய உயர்வு கிடைக்கவில்லை என்று புலம்பியவர்களுக்கு இது மேலும் வருத்தத்தை அளிக்கும்.

ஹார்டுவேர்

ஹார்டுவேர்

ஹார்டுவேர்(செமிகண்டக்டர்) துறையைச் சேர்ந்தவர் இந்த ஆண்டு 11.3 சதவீதம் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்.

பார்மா, என்ஜினியரங்

பார்மா, என்ஜினியரங்

பார்மா, என்ஜினியரிங் மற்றும் கஸ்யூமர் குட்ஸ் துறையில் பணியாற்றுபவர்களுக்கு 10 முதல் 12 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.

கே.பி.ஓ.

கே.பி.ஓ.

கே.பி.ஓ.க்களில் வேலை பார்ப்பவர்களுக்கு 11.9 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கலாம். அந்த துறையில் கிராக்கியும், முதலீடும் அதிகம் உள்ளதால் இந்த ஊதிய உயர்வு.

பைனான்ஸ்

பைனான்ஸ்

ரீடெய்ல், பைனான்ஷியல் சர்வீசஸ் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே ஊதிய உயர்வு கிடைக்கும்.

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல் துறை சற்று ஆட்டம் கண்டுள்ளதால் அந்த பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.

ஆனால்...

ஆனால்...

இந்த ஆண்டு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறைவாக இருப்பினும் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு சராசரியாக 15.3 சதவீதம் ஊதிய உயர்வு கிடைக்குமாம்.

English summary
According to Aon Hewitt survey, salary hikes for those working in India will be average 10 percent in the year 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X