மோடியின் உருது வெப்சைட்டை துவக்கி வைத்த நடிகர் சல்மான் கானின் தந்தை
மும்பை: நடிகர் சல்மான் கானின் தந்தையும், பிரபல திரைக்கதை ஆசிரியருமான சலிம் கான் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்(www.narendramodi.in/) உருது பதிப்பை துவக்கி வைத்தார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் பெயரில் அதிகாரப்பூர்வ இணையதளம்(www.narendramodi.in/) உள்ளது. இந்த இணையதளம் இந்தி, குஜராத்தி, தமிழ், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் உள்ளது. இந்நிலையில் இந்த இணையதளத்தின் உருது பதிப்பை நடிகர் சல்மான் கானின் தந்தையும், பிரபல திரைக்கதை ஆசிரியருமான சலிம் கான் இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் துவக்கி வைத்தார்.

சலிம் கான் மோடியின் ஆதரவாளர் ஆவார். குஜராத் கலவர விவகாரத்தில் கூட மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் சலிம். மேலும் குஜராத்தில் முஸ்லீம்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், கடந்த 12 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் எந்தவித கலவரமும் நடக்கவில்லை என்றும் சலிம் தெரிவித்திருந்தார்.
1992ம் ஆண்டில் மும்பையில் கலவரம் நடந்தபோது அப்போதைய மகாராஷ்டிரா முதல்வரை யாரும் குறைகூறவில்லை. ஏன் அப்போது முதல்வராக இருந்தவரின் பெயர் கூட பலருக்கு நினைவில் இருக்காது என்று சலிம் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications