பொய் வழக்கு போட்டு துன்புறுத்தல்.... நாடாளுமன்ற உரிமை மீறல் குழுவிடம் சசிகலா புஷ்பா புகார் மனு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தம் மீது பொய்வழக்கு போட்டு துன்புறுத்துவதாக நாடாளுமன்ற உரிமை மீறல் குழுவிடம் சசிகலா புஷ்பா புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

தமிழக போலீசார் ஏதாவது ஒரு வழக்கில் சசிகலா புஷ்பாவை கைது செய்வதில் முனைப்பாக இருக்கிறது. இதனால் பாஜக தலைவர்களிடம் தஞ்சமடைந்தார் சசிகலா புஷ்பா.

Sasikala Pushpa files complaint in Parliamentary privilege committee

அவர்களது ஆலோசனையின் பேரில் நாடாளுமன்ற உரிமை மீறல் குழுவிடம் ஒரு புகாரை சசிகலா புஷ்பா தர இருப்பதாக நமது ஒன் இந்தியாவில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இன்று நாடாளுமன்ற் உரிமைமீறல் குழுவிடம் சசிகலா புஷ்பா ஒரு மனுவை கொடுத்துள்ளார்.

அதில், தம் மீது பொய்வழக்குகள் போடப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும் தமக்கு உரிய பாதுகாப்பு தரக் கோரியும் வேண்டுகோள் விடுத்துள்ளார் சசிகலா புஷ்பா. இது தொடர்பாக நாடாளுமன்ற உரிமை மீறல் குழு தமிழக அரசு அதிகாரிகளுக்கு விரைவில் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Expelled ADMK Rajyasabha MP Sasikala Pushpa today file a complaint against TN Police in parliamentary privilege committee.
Please Wait while comments are loading...