• search

சசிகலா புஷ்பாவிற்கு விவாகரத்து - கணவரை விட்டு பிரிந்தார்

By Mayura Akhilan
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய கணவரை கழட்டிவிட்ட சசிகலா புஷ்பா- வீடியோ

   டெல்லி: சசிகலா புஷ்பா எம்.பி தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். டெல்லி குடும்பநல நீதிமன்றம் இருவருக்கும் பரஸ்பர விவாகரத்து அளித்துள்ளது.

   அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா,41. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சசிகலா புஷ்பாவும், அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகனும் டெல்லி துவாரகாவில் உள்ள குடும்ப நல கோர்ட்டு முதன்மை நீதிபதி பி.ஆர்.கேடியா முன்னிலையான அமர்வு முன்பாக பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருந்தனர்.

   இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இவர்கள் இருவருக்கும் இடையிலான விவாகரத்துக்கு அனுமதி வழங்குவதாகவும் இருவரும் அவரவர்களின் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

    சசிகலா புஷ்பா வரலாறு

   சசிகலா புஷ்பா வரலாறு

   தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அடையல் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்தவர் சசிகலா புஷ்பா. டீச்சர் ட்ரெயிங் படித்துவிட்டு வேலைக்குக் காத்திருந்த சமயத்தில், நெல்லை மாவட்டம் உவரி கிராமத்தை சேர்ந்த லிங்கேஸ்வர திலகம் என்பவருடன் 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.

    அரசியல் பயணம்

   அரசியல் பயணம்

   லட்சிய வேலையான டீச்சர் வேலை கிடைத்தபாடில்லை. சென்னையில் கணவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்துவந்த ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் நர்சரி டீச்சராக வேலைக்கு சேர்ந்தார். அரசியல் ஈடுபாடு காரணமாக அதிமுகவில் நுழைந்து அதே வேகத்தில் மணல் மனிதரின் ஒத்துழைப்பு, ஐஏஎஸ் அதிகாரிகளின் நட்பு காரணமாக அடுத்தடுத்த பதவிகளைப் பெற்று உச்சத்திற்கு சென்றார்.

    சசிகலா நீக்கம்

   சசிகலா நீக்கம்

   2011ஆம் ஆண்டு முதல் அதிர்ஷ்ட காற்று அவர் பக்கம் வீசியது. தூத்துக்குடி மாநகராட்சி மேயர், அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் என அடுத்தடுத்து பதவி கிடைத்தது. மாநில மகளிரணி செயலாளர் பதவியும் கிடைத்தது. உச்சத்திற்கு போன அதே வேகத்தில் கீழே விழுந்தார் சசிகலா புஷ்பா.

    சசிகலா புஷ்பா சர்ச்சை

   சசிகலா புஷ்பா சர்ச்சை

   ஆண் நண்பருடன் ஆபாசமாக பேசியது. திருச்சி சிவா எம்பியை விமானநிலையத்தில் அறைந்தது என சர்ச்சையில் சிக்கினார். உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று ஜெயலலிதாவிற்கு எதிராக ராஜ்யசபாவில் பேசி கண்ணீர் விட்டார். அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவினார் நீக்கப்பட்டார். அரசியல் வாழ்க்கை வீழ்ச்சியடைந்த அதே நேரத்தில் குடும்ப வாழ்க்கையிலும் கசப்பு உருவானது.

    விவகாரத்து அளித்த கோர்ட்

   விவகாரத்து அளித்த கோர்ட்

   சசிகலா புஷ்பாவும், அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகனும் டெல்லி துவாரகாவில் உள்ள குடும்ப நல கோர்ட்டு முதன்மை நீதிபதி பி.ஆர்.கேடியா முன்னிலையான அமர்வு முன்பாக பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இவர்கள் இருவருக்கும் இடையிலான விவாகரத்துக்கு அனுமதி வழங்குவதாக கூறியுள்ளார்.

   பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   English summary
   Sasikala Pushpa, the controversial MP belonging to the AIADMK and her husband Lingeswara Thilagan got separated by a court order on March 16, 2018. The 24-year long nuptial life got terminated by an order issued by B R Kedia, Princpal Judge, Family Courts, South West District, Dwarka, New Delhi.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more