அந்த வீடியோ உண்மைதான்.. அடித்துச் சொல்கிறார் டிஐஜி ரூபா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கையில் பையுடன் சசிகலா ஷாப்பிங் போய்விட்டு வருவது போல வெளியான வீடியோ அனைத்தும் உண்மைதான். ஆனால் சி.சி.டி.வியில் பதிவான காட்சிகள் எப்படி வெளியானது என்றுதான் தெரியவில்லை என்று போலீஸ் டிஐஜி ரூபா கூறியுள்ளார்.

சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, சசிகலாவுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், அதற்காக கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். தொடர்ந்து, சசிகலா பற்றிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கின.

இந்த வீடியோவில் இருப்பது உண்மையில்லை என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். ஆனால் அவை அனைத்தும் உண்மைதான். ஆனால் சி.சி.டி.வியில் பதிவான காட்சிகள் எப்படி வெளியானது என்றுதான் தெரியவில்லை. அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று டிஐஜி ரூபா கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு விதியை மீறி எவ்வித சலுகைகளும் காட்டப்படவில்லை. அவர் சிறையில் இருந்து ஷாப்பிங் சென்று வருவது போல் வீடியோ வெளியிடப்படுகிறது.இதன் மூலம் சிறையில் இருப்பவர்களை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார்.

கிராபிக்ஸ் வீடியோ

கிராபிக்ஸ் வீடியோ

சசிகலா தொடர்பான வீடியோவை கொண்டு வாருங்கள். அதனைப் பொய் என்பதை நான் நிரூபிக்கின்றேன். அந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று எனக்கு தெரிய வேண்டும் என்று கர்நாடக மாநில அதிமுக நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார்.

வீடியோ உண்மைதான்

வீடியோ உண்மைதான்

சிறையில் சசிகலா கைப்பையுடன் இருப்பதுபோல வெளியாகியுள்ள வீடியோ உண்மையானதுதான் என்று டிஐஜி ரூபா கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், சிறையில் சோதனை நடத்திய போது பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. அதைத்தான் அறிக்கையாக சிறைத்துறை டிஜிபிக்கு அனுப்பிவைத்தேன். அந்த அறிக்கை ரகசியமான ஒன்று. அதுபற்றி வெளிப்படையாகப் பேச முடியாது.

எப்படி வெளியானது

எப்படி வெளியானது

யாருடைய பேச்சை கேட்டும் நான் சிறைக்கு சென்று ஆய்வு செய்யவில்லை. முறைகேடு நடைபெறுவதாக தெரியவந்தது. இதையடுத்தே நான் சிறையில் ஆய்வு மேற்கொண்டேன். யாருடைய முறைகேட்டையும் வெளியே கொண்டுவரவேண்டிய நோக்கம் எனக்கு இல்லை. சசிகலா வீடியோ அனைத்தும் உண்மைதான். ஆனால் சி.சி.டி.வியில் பதிவான காட்சிகள் எப்படி வெளியானது என்றுதான் தெரியவில்லை. அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ரூபா கூறியுள்ளார்.

இன்னும் 2 வீடியோ இருக்கு

இன்னும் 2 வீடியோ இருக்கு

சசிகலா சம்பந்தப்பட்ட மேலும் 2 வீடியோக்கள் புதிதாக வெளியாக வாய்ப்பு உள்ளதாக கன்னட தொலைக்காட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. சசிகலாவும், இளவரசியும் மேக்கப் போடுவது போன்ற வீடியோவும் அவர்கள் சிறைக்கு வெளியே ஷாப்பிங் செல்வது போலவும் வீடியோக்கள் எடுக்கப்பட்டு அந்த வீடியோக்கள் கன்னட தனியார் டி.வி.சேனல் வசம் இருப்பதாகவும் விரைவில் அவை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DIG Roopa said that, Sasikala Without Jail Uniform Leisurely Walking in Corridor CCTV video is real.
Please Wait while comments are loading...