For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காளைகள் விலங்குகள் அல்ல... ஜல்லிக்கட்டு வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டு: மத்திய அரசு வாதம்

விலங்குகளைப் போல காளைகளை கருத கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: விலங்குகளைப் போல காளைகளைக் கருத கூடாது; ஜல்லிக்கட்டு என்பது வீரத்தையும் வலிமையையும் வெளிப்படுத்தும் விளையாட்டு என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாரிமன் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா, ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை சரியானதுதான் என வாதாடினார்.

SC refuses review ban on Jallikattu

மேலும் விலங்குகளைப் போல காளைகளை கருதக் கூடாது; ஜல்லிக்கட்டு என்பது அதில் பங்கேற்போரின் வீரத்தையும் வலிமையையும் வெளிப்படுத்துகிற ஒரு விளையாட்டு எனவும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனாலும் ஜல்லிக்கட்டு விளையாட்டு கொடூரமானது எனக் கூறி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர்.

English summary
The Supreme Court today rejected a review petition filed by Tamil Nadu challenging the ban on Jallikattu. Additional Solicitor General P.S. Narasimha, appearing for the Centre justified the notification and said bull is not a performing animal and Jallikattu is not a performance but a sport to test the valour and strength of the participants.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X