For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இறுதி வாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

SC refuses stay on Jaya-Sasikala assets case hearing

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி லெக்ஸ் ப்ராப்பர்டி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

அதில், வழக்கில் இருந்து தங்களது சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்றும், தங்களது மனுவை விசாரிக்கும் வரை பிரதான வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்ததோடு, இரு வழக்குகளும் ஒரே நேரத்தில் விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.

English summary
The Supreme Court on Thursday declined to stay the trial in disproportionate assets case involving Tamil Nadu Chief Minister J jayalalithaa and her aide Sasikala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X