ஓபிஎஸ் பதவி தப்பியது- 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்- சபாநாயகரே முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
Recommended Video
டெல்லி: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 அதிமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் தனபால் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக 2017-ல் பதவியேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு அந்த ஆண்டு பிப்ரவரி 18-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது அதிமுக கொறடா உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

ஆனாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. இந்நிலையில் அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் தனபாலிடம் திமுக மனு அளித்தது.
இதன் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. ஆனால் சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என கூறி திமுகவின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்தது. இதனை கடந்த பிப்ரவரி 4-ல் விசாரித்த உச்சநீதிமன்றம், தி முக கொடுத்த மனு மீது சபாநாயகர் முடிவு எடுக்காமல் காலதாமதம் செய்தது ஏன்? தேர்தல் ஆணையத்தில் இருந்த வழக்கை காரணம் காட்டி காலதாமதம் செய்தது ஏற்புடையதா? இந்த வழக்கில் 3 ஆண்டுகள் காலதாமதம் என்பது தேவையற்றது என பல்வேறு அதிருப்திகளை வெளிப்படுத்தியது.
மேலும் இது தொடர்பாக சபாநாயகர் தனபால் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக சபாநாயகர் தனபால் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அத்துடன் இந்த வழக்கின் விசாரணையும் முடித்து வைக்கப்பட்டது.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications