ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் தொகுதி பங்கீடு- மெகபூபா கட்சி மூத்த தலைவர் திடீர் விலகல்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிருப்தி ஏற்பட்டதால் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முசாஃபார் ஹூசைன் பெய்க் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 2 கட்டங்களாக நவம்பர் 28, டிசம்பர் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 22-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில் குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடுகின்றன. இக் கூட்டணியில் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இக் கட்சிகளிடையே மாவட்ட கவுன்சில் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது. ஆனால் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தம்முடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்பதால் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முசாஃபார் ஹூசைன் பெய்க் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர் முசாஃபார் ஹூசைன் பெய்க். இது மெகபூபா முப்திக்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications