For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரத்பிரபுவின் உடல் பிரேத பரிசோதனை - மருத்துவர்கள் குழு மேற்கொள்ள தந்தை கோரிக்கை

சரத்பிரபு பிரேத பரிசோதனையை மருத்துவர்கள் குழு மேற்கொள்ள வேண்டும் என்று டெல்லி போலீசிடம் சரப்பிரபு தந்தை செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் சரத்பிரபுவின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

சரத்பிரபு பிரேத பரிசோதனையை மருத்துவர்கள் குழு மேற்கொள்ள வேண்டும் என்று டெல்லி போலீசிடம் சரத்பிரபு தந்தை செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

Sharth Prabu's body autopsy on Tomorrow

கோவையில் இருந்து விமானம் மூலம் சரத்பிரபுவின் தந்தை செல்வமணி டெல்லி வந்த அவர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சரத்பிரபு உடலைப் பார்த்து தந்தை செல்வமணி கதறி அழுதார்.

திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்த மாணவர் சரத்பிரபு யூசிஎஎம்எஸ் மருத்துவக்கல்லூரியில் இரண்டாமாண்டு எம்எஸ் படித்து வந்தார். இன்று காலையில் மாணவர் சரத்பிரபு எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சரத்பிரபு கோவையில் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். டெல்லி பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யுசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் எம்டி படித்த வந்த அவர் இன்று காலை மர்மமான முறையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கையில் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு மாணவர் சரத் பிரபு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால் சரத்பிரபு என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

சரத்பிரபு இறந்தது குறித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் அவசரமாக டெல்லி விரைந்துள்ளனர். சரத்பிரபுவின் மரணம் அவரது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரத்பிரபு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் சரத்பிரபு தற்கொலை செய்து கொண்டதாக கருதுவதாக டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.

சரத்பிரபுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட கழிவறையில் ஊசி கண்டெடுக்கப்பட்டதாகவும், பொட்டாசியம் குளோரைடு கண்டெடுக்கப்பட்டதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர். பொட்டாசியம் குளோரைடை ஊசி மூலம் தனது உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இது உடனடியாக நரம்புகளை முடக்கிப் போடக்கூடியது. உடன் தங்கியிருந்தவர்களுடன் நடத்திய விசாரணையில் இது தெரியவந்ததாக டெல்லி போலீசார் கூறினார்.

அதே நேரத்தில் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத தனது மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார் சரத்பிரபுவின் தந்தை செல்வமணி. டெல்லியில் தனது மகனின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதார் செல்வமணி.

மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் சரத்பிரபுவின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் நாளை பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

சரத்பிரபுவின் பெற்றோர்களுக்கு உதவுவதற்காக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக இல்லத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சரத்பிரபு பிரேத பரிசோதனையை மருத்துவர்கள் குழு மேற்கொள்ள வேண்டும் என்று டெல்லி போலீசிடம் சரத்பிரபு தந்தை செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Autopsy on Sharth Prabu 28year-old doctor was found dead in his rented accommodation in Delhi’s Dilshad Garden on Wednesday morning.Dr Sharath Prabhu, the deceased, hailed from Coimbatore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X