For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நகருக்குள் புகுந்து வாகனங்களை நொறுக்கி, 100 வீடுகளை உடைத்த யானை... பீதியில் தெறித்து ஓடிய மக்கள்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சிலிகுரி பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்து வாகனங்களை அடித்து நொறுக்கி, 100 வீடுகளை உடைத்து துவம்சம் செய்ததால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

வனப்பகுதிகளை அழித்து குடியிருப்புகளை ஏற்படுத்துவதால், உணவுத் தேவைக்காக வனவிலங்குகள் நகருக்குள் ஊருவுவது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு வங்கம் சிலிகுரி பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்தது. சாலையில் ஓடிச் சென்ற அந்த யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியது. பின்னர் குடியிருப்புகளுக்குள் நுழைந்து, சுமார் 100 வீடுகளையும் இடித்துத் தள்ளி துவம்சம் செய்தது.

யானை சுற்றித்திருவதை கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் யானைக் கட்டுப் பட்டுத்த முயற்சித்தனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி யானையை விரட்டியடித்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகுந்து சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருதாக கூறிய மக்கள் யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் மனிதர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

English summary
A wild elephant, which strayed into the residential area of Siliguri in West Bengal, damaged around 100 houses on the Sevoke Road area of the town on Tuesday. No one has been injured in the incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X