For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்க நல்ல பிள்ளையா, சமத்தா.. அப்ப சீட்டைப் பிடிங்க.. உ.பி பாஜகவின் பலே திட்டம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    உ.பி பாஜகவின் பலே திட்டம்!- வீடியோ

    அலகாபாத் : உத்தரபிரதேசத்தில் மக்களிடம் நற்பெயர் வாங்கியவர்களுக்கு எம்.பி. சீட் வழங்க பாஜக திட்டமிட்டுள்ளது. பெயரளவிற்கு உள்ளவர்களை வெளியேற்றி விட்டு, நற்பெயரை வாங்கியவர்களுக்கு சீட் வழங்கப்பட உள்ளது.

    அம்மாநிலத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வேலையை பாஜக தொடங்கி விட்டது. அதே நேரம், சமாஜ்வாடி கட்சி (எஸ்.பி.) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க பாரதீய ஜனதா கட்சி முயற்சித்து வருகிறது.

    நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள், அவர்களின் புகழ், மக்களின் எதிர்ப்பு என அனைத்தையும் ஆராய்ந்து விட்ட செல்வாக்கை மீண்டும் பெற பாஜக தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    மோடி அலை

    மோடி அலை

    2014 ஆம் ஆண்டுக்கான லோக் சபா தேர்தலில் பாஜக 73 இடங்களை வென்றது. இந்த வெற்றிக்கு காரணம் மாநிலத்தில் இருந்த 1.67 லட்சம் வாக்குச்சாவடிகளை சரியாக நிர்வகித்தது தான் காரணம் என கூறப்படுகிறது. மற்ற அரசியல் கட்சியினரை விட பல மடங்கு சிறப்பாக அமைந்திருந்தது பாஜக வின் தேர்தல் வியூகங்கள். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்களின் தோல்விக்கு பிறகு பாஜக சுயபரிசோதனை செய்து கொண்டுள்ளது.

    மாநில அமைச்சர்களுக்கு வாய்ப்பு

    மாநில அமைச்சர்களுக்கு வாய்ப்பு

    யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களுக்கு லோக் சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, மோடி அலையால் அதிக எம்.பி. தொகுதிகளை வெல்ல வாய்ப்பாக இருந்தது.

    பாஜக கல்தா

    பாஜக கல்தா

    ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. உதாரணமாக, மதுராவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை ஹேமா மாலினிக்கு பதிலாக மாநில எரிசக்தி துறை அமைச்சராக உள்ள ஸ்ரீகாந்த் ஷர்மா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    சிறப்புக் குழு அமைப்பு

    சிறப்புக் குழு அமைப்பு

    மாநிலத்தின் அனைத்து மட்டங்களையும் பாஜக ஆராய்ந்து வருகிறது. அந்த வகையில் உத்தர பிரதேசத்தில் உள்ள 17 ரிசர்வ் தொகுதிகளில் யாரை நியமிக்கலாம் செல்வாக்குமிக்க நபர் யார் என ஜல்லடை போட்டு தேடி வருகின்றனர். இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினராக இருந்தாலும் மக்களின் விருப்பப்படியே வேட்பாளரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பாஜகவுக்கு நெருக்கடி

    பாஜகவுக்கு நெருக்கடி

    ஏற்கனவே, பாஹ்ராச் தொகுதி எம்.பி. சாவித்ரி பாய் புலே பா.ஜ கட்சியிலிருந்து விலகியுள்ளார். அதே போல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை இரண்டு பாஜக எம்.பி.க்கள் சந்தித்து பேசியுள்ளனர். இன்னும் பல எம்.பி-க்கள் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இது பாஜகவிற்க பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    English summary
    BJP is looking at activities of MPs, their popularity, resentment of people against them and also looking for such candidate who could be an answer to the strategy of the opposition in UP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X