தவெகவிடம் 5 அமைச்சரவை, சபாநாயகர் பதவி கேட்ட அதிமுக? எடப்பாடி வைத்த மெகா டிமாண்ட்!
சென்னை: தவெக ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு வழங்க வேண்டுமென்றால், அமைச்சரவையில் 5 இடங்கள் மற்றும் சபாநாயகர் பதவியை அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி டிமாண்ட் வைத்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே அதிமுக எம்எல்ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க தீவிரமாக இருக்கிறார். ஏற்கனவே ஆளுநர் ராஜேந்திர கர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

ஆனால் ஆளுநர் தரப்பில் 118 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதம் தேவை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இன்று நடக்கவிருந்த விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா நடக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த சூழலில் தவெக எம்எல்ஏ-க்களின் ஆலோசனை கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடக்கவுள்ளது.
இதனிடையே தவெக ஆட்சியமைக்க அதிமுகவிடம் ஆதரவு கோரியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செங்கோட்டையன் மூலமாக அதிமுகவின் 2ஆம் கட்ட நிர்வாகிகளை தவெக தொடர்பு கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்கு செல்ல, அவர் அதிமுகவுக்கு சபாநாயகர் பதவியையும், அமைச்சரவையில் 5 இடங்களையும் கேட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
எதிர்க்கட்சி அந்தஸ்தை அதிமுக இழந்துவிட்ட சூழலில், கிங் மேக்கராக செயல்பட எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துவிட்டார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. நேற்று நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் கேபி முனுசாமி பேசும் போது கூட, தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது என்று வெளிப்படையாகவே கூறினார்.
ஆனால் நேற்று நள்ளிரவில் அதிமுகவின் பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ஆகிய மூவரின் தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் புதுச்சேரிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் அதிமுக தலைமையை மீறி எம்எல்ஏ-க்கள் யாரும் அந்தப் பக்கம் சென்றுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையே காரணமாக பார்க்கப்படுகிறது.
-
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
சட்டஒழுங்கு நெருக்கடி.. உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? கைமாறும் போலீஸ் கண்ட்ரோல்? -
"வாழ்க்கை என்பது ஆரம்பத்தில் கண்ட கனவை விட".. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சமந்தா பதிவு -
சட்டப்பேரவை கூட்டம்.. விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்! பெரிய பிளானுடன் இறங்கும் எதிர்க்கட்சிகள்! -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்?











Click it and Unblock the Notifications