For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெற்றோர் சம்பாதித்து வாங்கிய வீட்டில் மகனுக்கு வாழ உரிமை இல்லை.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெற்றோர் சம்பாதித்து வாங்கிய வீட்டில் சட்டப்படி வாழ மகனுக்கு உரிமை இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: அப்பா, அம்மா சம்பாதித்து வாங்கிய வீட்டில் மகனுக்கு சட்டப்படி வாழ உரிமை இல்லை எனவும், அவர் சொந்தம் கொண்டாட முடியாது எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

டெல்லியில் ஓய்வு பெற்ற பெற்றோர்களுடன் அவர்களின் மகன்களும், மகள்களும் வசித்து வந்தனர். நாளடைவில் அவர்கள் தொந்ததரவு கொடுத்ததால் அம்மாவும், அப்பாவும் போலீசில் புகார் அளித்தனர். மகன்களும், மகள்களும் தங்களுடைய வீட்டில் நுழையக் கூடாது என பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

 Son can stay at parent's house at their mercy- Delhi High Court

அப்பா, அம்மாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மகன்களும், மகள்களும் சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தங்களுடைய சம்பாத்தியத்தில் வாங்கியதாக அப்பா கூறும் வீட்டை, வாங்க நாங்களும் பணம் கொடுத்ததாக கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம் பெற்றோருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதனைத் எதிர்த்து மகன்களில் ஒருவரும் அவரது மனைவியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி பிரதீபா ராணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வீட்டை வாங்கவும் கட்டவும் மகன் பணம் கொடுத்ததாக நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் மகன் நீதிமன்றத்தில தாக்கல் செய்யவில்லை.

எனவே சுய சம்பாத்தியத்தில் பெற்றோர் கட்டிய வீட்டில் வசிக்க மகன், மகள்களுக்கு உரிமை இல்லை. பெற்றோர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களின் ஆயுட்காலம் வரை இருந்து கொள்ளலாம். ஆனால் சட்டப்படி அந்த வீட்டை பிள்ளைகள் உரிமை கொண்டாட முடியாது என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

English summary
A son, irrespective of his marital status, has no legal right to live in the self-acquired house of his parents and can reside there only at their "mercy", the Delhi High Court has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X