For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி இடைத்தேர்தலில் பாஜகவிற்கு சம்மட்டி அடி... சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மறைமுக கூட்டணிக்கு வெற்றி!

உத்திரபிரதேச சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜகவிற்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மறைமுக கூட்டணி லோக்சபா இடைத்தேர்தல் முடிவில் ஷாக் கொடுத்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    கோரக்பூர் தொகுதியில் பாஜக தோல்வி முகம்..வீடியோ

    லக்னோ : உத்திரபிரதேச சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பாஜகவிற்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மறைமுக கூட்டணி லோக்சபா இடைத்தேர்தலில் ஷாக் கொடுத்துள்ளது.

    உ.பி வெற்றியை முன் உதாரணமாக காட்டியே பிற மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தது. ஆனால் உ.பியில் 2 லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் அந்த மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கு ஓராண்டுக்குப் பிறகு எப்படி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

    SP-BSP informal alliance bring victory in UP loksabha bye elections

    இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பரஸ்பர ஆதரவை மேற்கொண்டதன் பலன் தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளது. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற ரீதியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கைகோர்த்து செயல்பட்டது உத்திரபிரதேச அரசியல் களத்தை மாற்றிப் போட்டுள்ளது.

    தேர்தலில் தனித்து களம் கண்டது காங்கிரஸ் கட்சி. அடுத்த ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உ.பியில் பாஜகவை தோற்கடிக்க ஒரு புதிய கூட்டணி அதாவது சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் தயாராகிவிட்டது என்பதன் முன்னோட்டமாகவே இந்த இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்பட்டுள்ளன. எனவே இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இணைவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை நிரூபனமாக்கியுள்ளன தேர்தல் முடிவுகள்.

    English summary
    UP political scenario after elections : SP-BSP informal alliance bring victory to them and it seems the new alliance will continue in 2019 parliament elections, and congress has no way to join in this alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X