For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஆடு உறவு + குட்டியும் உறவு".. ஓவர்நைட்டில் அதிசயம்.. மலைக்க வைத்த "ஸ்டார் தம்பதி".. கடைசியில் ஹைலைட்

ஆட்டுக்குட்டிக்கு பிறந்தநாள் விழா கொண்டாடி உள்ளார்கள் உபி தம்பதியர்

Google Oneindia Tamil News

கான்பூர்: உத்தரபிரதேச தம்பதி செய்த காரியத்தை பார்த்து, ஊரே ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளது.. இந்த தம்பதிக்கு பாராட்டையும், வாழ்த்தையும் சொல்லி வருகிறார்கள்.. என்ன காரணம்?

மனிதர்களுக்கு செல்லம் என்றாலே அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணிகள்தான்.. பலரின் குடும்பத்தில் இந்த பிராணிகள் ஒரு முக்கிய உறுப்பினராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

எத்தனையோ குடும்பங்களின் இறுக்கமான சூழல்களை, இதுபோன்ற நாய், பூனை, முயல் போன்ற பிராணிகள் மகிழ்ச்சியாக மாற்றுகின்றன.,. பலமடங்கு புத்துணர்ச்சியை வாரி வழங்குகின்றன.. நம்மிடம் இந்த உயிரினங்கள் காட்டும் பாசமும், அன்பும், விசுவாசமும் எந்தவித நிபந்தனையுமற்றது..

 சிதறும் கோபம்

சிதறும் கோபம்

அதேசமயம், இந்த பிராணிகளுக்கும் உணர்வுகள் உண்டு.. கோபம், மகிழ்ச்சி, வருத்தம், ஏமாற்றம், வெறித்தனம், என அத்தனை உணர்வுகளும் உண்டு.. தன்னை வளர்க்கும் ஓனர்களிடம் உரிமையாக கோபப்பட்டுக் கொள்ளும்.. ஆனா, அடுத்த நிமிடமே, உற்சாகமாகத்தில் ஓடிவந்து நெருங்கி நின்று நேசத்தை கொட்டிச்செல்லும்... இந்த அன்பில் கரைந்து காணாமல் போனவர்கள் லட்சக்கணக்கில் உலகம் முழுவதும் சிதறுண்டு கிடக்கிறார்கள். இதுபோன்ற நெகிழ்வு உணர்வுகள் வீட்டில் வளர்க்கும் பிராணிகளிடம் மட்டுமே உண்டு என்பது கிடையாது.. காட்டில் உள்ள உயிரினங்களுக்கும் இந்த உணர்வு உண்டு..

 ஆடு + ராஜா

ஆடு + ராஜா

இதோ ஒரு நெகிழ்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.. பாந்தா பகுதியின் கன்ஷிராம் காலனியில் மனைவியுடன் வசித்து வருகிறார் ராஜா.. இந்த தம்பதிக்கு ரொம்ப வருஷமாகவே குழந்தைகள் இல்லை.. இதனால் இவர்கள் அளவுக்கு அதிகமான மனவருத்தத்தில் வாழ்ந்து வந்தனர்.. அதனால், சில வருடங்களுக்கு முன்பு, இவரது மனைவி ஒரு ஆட்டுக்குட்டியை வீட்டுக்குள் கொண்டு வந்து வளர்க்க போவதாக சொன்னார். இதைக்கேட்டு ராஜாவும் பூரித்து போனார்.. இருவருமே அந்த ஆட்டுக்குட்டியை பிரியத்துடன் வளர்க்க ஆரம்பித்தனர்..

 முத்த மழை

முத்த மழை

அந்த ஆட்டுக்குட்டியும், நாளடைவில், அந்த வீட்டில் ஒரு குழந்தை போலவே, இங்குமங்கும் ஓடியாடி புழங்க ஆரம்பித்துவிட்டது. தம்பதியும், அந்த ஆட்டுக்குட்டியை தங்களது வாரிசாகவே பாவிக்க துவங்கினர்.. இதனால், ஆட்டுக்குட்டிக்கு எந்நேரமும் கொஞ்சலும் முத்தமழையும் மாறி மாறி கிடைத்தது.. இந்நிலையில், ராஜாவும், அவரது மனைவியும் திடீரென தாத்தா பாட்டி ஆகிவிட்டார்கள்.. அதாவது, இவர்களின் வாரிசு ஆடு, 2 குட்டிகளை ஈன்று அந்த குடும்பத்தையே விருத்தி செய்துவிட்டது. இதனால் திக்குமுக்காடி போனார்கள் ராஜா தம்பதி..

 ஹேப்பி பர்த்டே

ஹேப்பி பர்த்டே

இந்நிகழ்வுக்கு சிறப்பான ஒரு விழாவை எடுத்துவிடுவது என்று முடிவு செய்தார்கள்.. கொரோனா உச்சத்தில் இருந்தபோதுதான், இந்த குட்டிகள் பிறந்தன.. அந்த நேரத்தில் விழா வைத்தால், யாராலும் கலந்து கொள்ள முடியாது என்பதால், விழாவை தள்ளி போட்டனர்.. இதற்காகவே இருவரும் ஒரு வருடம் காத்திருந்தனர்.. இப்போது, அந்த பேரக்குட்டிகளின் முதல் பிறந்தநாளை, சீரும் சிறப்புமாக கொண்டாடிவிட்டனர்.. தங்கள் சொந்தக்காரர்களையும், நண்பர்களையும், ஊரையும் அழைத்து விருந்து வைத்தனர்..

 ஆட்டுக்குட்டி

ஆட்டுக்குட்டி

இந்த ஆட்டுக்குட்டிகளுக்காகவே ஸ்பெஷலாக கேக் தயாரிக்கப்பட்டிருந்தது.. அந்த கேக் குதூகலத்துடன் வெட்டப்பட்டது.. ஆண் குட்டிக்கு, குபேர் என்று பெயர் வைத்தார்கள். பெண் குட்டிக்கு லஷ்மி என்று பெயர் வைத்தள்ளனர்.. கோயில்களில் சிறப்பு பூஜையும் நடந்துள்ளது.. இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால், பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு "டிஜே" எல்லாம் வரவழைத்து, மியூசிக் பார்ட்டி நடத்தப்பட்டதாம்... அதைவிட இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால், விருந்துக்கு போனவர்கள், அந்த குழந்தைகளை வாழ்த்திவிட்டு வராமல், மொய் எழுதிவைத்து போனார்களாம்..

நான்வெஜ்

நான்வெஜ்

சொந்தக்காரர்கள் மட்டும், ஆட்டுக்குட்டிகளுக்கு சால்வைகள், கம்பளி ஆடைகள் கிப்ட் தந்திருக்கிறார்கள். இந்த நிகழ்வு குறித்து ராஜா சொல்லும்போது, நாங்கள் என்னைக்கு ஆட்டுக்குட்டியை வளர்க்க ஆரம்பித்தோமோ, அன்னைக்கே நான்வெஜ் சாப்பிடுவதை நிறுத்திவிட்டோம்.. எங்களுக்கும் குழந்தைகள் இல்லாத ஏக்கம் காணாமல் போய்விட்டது என்று மகிழ்ந்து சொல்கிறார்.. பொதுவாகவே, உத்தரபிரதேசத்தில் பசுவுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றாலும், இப்படி ஆட்டுக்குட்டியை வளர்த்து, அதற்கு விழா எடுத்துள்ளது வித்தியாசமாக உள்ளது..

 பூரிப்பு சபாஷ்

பூரிப்பு சபாஷ்

இந்த விழா மூலம், இந்த தம்பதி ஓவர்நைட்டில் "ஸ்டார் தம்பதி" ஆகிவிட்டார்களாம்.. ஆங்காங்கே, தங்கள் பெற்றோருக்கு பெற்ற பிள்ளைகளே, சோறு போடாமல் அனாதையாக அலைய விடும் இந்த காலத்தில், கள்ளக்காதலனுக்காக, பச்சிளம் குழந்தைகளை அதன் அம்மாக்களே கொலை செய்யும் இந்த பயங்கரமான சமூகத்தில், ஜீவராசியின் மீது இந்த இந்த தம்பதி காட்டும் பாசம் மனதை பிசைந்தெடுக்கிறது.. உண்மைதான்.. "அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!!"

English summary
Special Function and uttar pradesh Lovely couple celebrate birthday for their goats
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X