For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காந்தியின் கொள்கைகள் இந்தியாவில் இன்னமும் உயிர் வாழ்கிறது: ஒபாமா

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், அங்கிருந்த வருகையாளர் புத்தகத்தில்' காந்தியின் கொள்கைகள் இந்தியாவில் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாக' பதிவு செய்தார்.

66வது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா, டெல்லி ராஜ்காட்டில் காந்தி சமாதியில் மலர்வளையம் வைத்தும், மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

Spirit of Gandhi very much alive in India today: Obama

பின்னர், அங்கிருந்த வருகையாளர் புத்தகத்தில், ‘காந்தியின் கொள்கைகள் இந்தியாவில் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. காந்தியின் கொள்கைகள் உலகிற்கு கிடைத்த ஒரு பெரிய பரிசாகும். அந்த கொள்கைகளின் அடிப்படையில் உலக அளவில் அன்புடனும், சமாதானத்துடனும் நாம் வாழ வேண்டும்,' என்ற டாக்டர் மார்ட்டின் லூதர்கிங் ஜூனியரின் கருத்து இன்று உண்மையாகி வருகிறது,' என ஒபாமா எழுதினார்.

3 நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி நினைவிடத்திற்கு வந்த ஒபாமாவுக்கு ஒரு சிறிய காந்தி சிலை, ஒரு ராட்டை, ராட்டையில் நெய்யப்பட்ட காதி துணிமற்றும் காந்தியின் சுயசரிதை உள்ளிட்ட 3 நூல்களும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.

ஒபாமா ராஜ்காட்டுக்கு வருவது இது 2வது முறையாகும். ஏற்கனவே 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் இந்தியா வந்தபோதும் காந்தி நினைவிடத்திற்கு வந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
US President Barack Obama, who will be the chief guest at India's 66th Republic Day parade, said on Sunday that the "spirit of (Mahatma) Gandhi is very much alive in India today".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X