அரசு நடத்த முடியாவிட்டால் சீட்டை காலி செய்யுங்கள்.. மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: வேலையை செய்யுங்கள், அல்லது சிம்மாசனத்தை விட்டு இறங்குங்கள் என்று காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

ராகுல் காந்தி கடந்த சில நாட்களாகவே பொருளாதார கொள்கைகளை முன் வைத்து மோடி அரசை தாக்கி வருகிறார். இந்த நிலையில், கடந்த 16 மாதங்களில் வீடுகளுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை 19வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ள செய்தியை கையில் எடுத்து தாக்குதல் நடத்தியுள்ளார் ராகுல் காந்தி.

Start delivering or quit: Rahul Gandhi

"காஸ் சிலிண்டர் விலை உயர்வு, ரேஷனில் விலை உயர்வு, வெற்று பேச்சுக்களை விடுங்கள். விலைவாசியை கட்டுப்படுத்துங்கள், வேலைவாய்ப்பு கொடுங்கள், அல்லது சிம்மாசனத்தை விட்டு இறங்குங்கள்", இவ்வாறு டிவிட்டரில் ராகுல் கூறியுள்ளார்.

இந்த டிவிட் பல ஆயிரம் பேரால் ரீடிவிட் செய்யப்பட்டு வருகிறது. முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் கடந்த சில நாட்களாக ஜிஎஸ்டி உள்ளிட்ட மத்திய அரசின் பொருளாதார தடுமாற்றங்கள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress Vice President Rahul Gandhi has used social media to target the PM Modi, telling him to stop his "hollow speeches", start delivering or quit.
Please Wait while comments are loading...