For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News : நிரந்தரமாக மூடப்படுகிறது ஸ்டெர்லைட்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

By Veera Kumar
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மக்களின் தொடர் போராட்டங்களையடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்பட உள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தூத்துக்குடி சென்று மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகு முதல்வருடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பல லேட்டஸ்ட் தகவல்களை உடனுக்குடன் அறிய இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Newest First Oldest First
8:33 PM, 28 May

13 பேர் கொல்லப்பட்டது குறித்து நாளைய பேரவை கூட்டத்தில் எழுப்புவோம்- ஸ்டாலின்
8:32 PM, 28 May

13 பேர் பலியானதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக சார்பில் வழக்கு
8:32 PM, 28 May

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஆலை மூடப்பட்டு கண்துடைப்பு நடத்தப்பட்டது
8:32 PM, 28 May

பேரவை கூடுகிறது என்பதற்காக துணை முதல்வர் ஓபிஎஸ் தூத்துக்குடி சென்று திரும்பினார்
8:32 PM, 28 May

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவை அரசாணையாக வெளியிட்டுள்ளனர்
8:32 PM, 28 May

ஸ்டெர்லைட் ஆலையை மூட அமைச்சரவையில் முடிவு எடுத்து அரசாணை பிறப்பிக்கவில்லை
8:32 PM, 28 May

அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் பேட்டி
8:32 PM, 28 May

13 பேர் உயிரிழப்புக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை பிறப்பித்ததில் உள்நோக்கம் உள்ளது
7:55 PM, 28 May

ஸ்டெர்லைட் ஆலை மூடலை தொடர்ந்து பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்
7:55 PM, 28 May

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்- தூத்துக்குடியில் மக்கள் கொண்டாட்டம்
7:25 PM, 28 May

அப்பாவி மக்களின் ரத்தத்தை குடித்த இதுபோன்ற போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடரக் கூடாது- ரஜினி
7:25 PM, 28 May

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது உயிரிழந்த ஆத்மாக்களுக்கு வெற்றி சமர்ப்பணம்- ரஜினி
6:50 PM, 28 May

தற்போதைய உத்தரவு நிரந்தரமாக அமலாக்கப்படுவதையும் மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் - கமல்ஹாசன்
6:50 PM, 28 May

மூடலை எதிர்க்கும் சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் - கமல்
6:50 PM, 28 May

தேவையில்லாத உயிர்ப்பலிகளையும், துரதிர்ஷ்டவசமான சம்பவங்களையும் நாம் தவிர்த்திருக்கலாம் -கமல்
6:50 PM, 28 May

இதுபோன்ற பிரச்சினையில் விரைந்து செயல்பட்டிருக்க வேண்டும் - கமல்ஹாசன்
6:50 PM, 28 May

100 நாட்களுக்கும் மேலான மக்கள் போராட்டத்தை தமிழக அரசு கவனத்துடன் அணுகியிருக்கலாம் - கமல்
6:50 PM, 28 May

மாற்றத்தை நாம் ஆரம்பித்து விட்டோம் - கமல்ஹாசன்
6:49 PM, 28 May

எந்த செய்தியையும் இனி கையைக் கட்டிக் கொண்டு நாம் வேடிக்கை பார்க்க மாட்டோம் - கமல்
6:49 PM, 28 May

ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன், கெளரவமாக உணர்கிறேன் - கமல்
6:49 PM, 28 May

இதை மக்கள் நீதி மய்யம் முன்னெடுத்துச் செல்லும் - கமல் அறிக்கை
6:49 PM, 28 May

அரசியல்வாதிகளின் பணி என்ன என்பதை தூத்துக்குடி மக்கள் தெளிவுபடுத்தி விட்டனர் - கமல்
6:49 PM, 28 May

மாற்றத்தை விரைவுபடுத்த மொத்த தமிழகமும் இனி கை கொடுக்கும் - கமல்
6:49 PM, 28 May

தமிழகத்தின் எதிர்கால அரசியலை தூத்துக்குடி மக்கள் மாற்றியுள்ளனர் - கமல்
6:40 PM, 28 May

தூத்துக்குடிக்காக உயிர் நீத்தவர்களிடமிருந்து பாடம் கற்போம் - கமல்
6:39 PM, 28 May

தூத்துக்குடி தியாகிகளுக்கு பெரும் சல்யூட் - கமல்
6:39 PM, 28 May

தூத்துக்குடி மக்களின் வெற்றிக்கு தமிழகம் தலைவணங்குகிறது - கமல்
6:39 PM, 28 May

மக்களின் வலிமை வென்றதாக கமல்ஹாசன் பாராட்டு
6:39 PM, 28 May

ஸ்டெர்லைட் ஆலை மூடல் அறிவிப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு
6:08 PM, 28 May

தூத்துக்குடி மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு நடவடிக்கை
READ MORE

English summary
Sterlite plant in Tamil Nadu's Tuticorin to be shut down permanently, order passed, by Tamilnadu Government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X