For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுரங்க ஊழல் வழக்கில் பெயில் வாங்க நீதிபதிக்கு லஞ்சம்.. சிக்கினார் கர்நாடக பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலு

கர்நாடகா மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த பாஜக எம்பி ஸ்ரீராமுலு, சுரங்க ஊழல் வழக்கில் சிக்கி இருந்த ரெட்டி சகோதரர்களை பெயிலில் கொண்டு வருவதற்காக நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்தது அம்பலம் ஆகியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சிக்கினார் கர்நாடக பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலு-வீடியோ

    பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த பாஜக எம்பி ஸ்ரீராமுலு, சுரங்க ஊழல் வழக்கில் சிக்கி இருந்த ரெட்டி சகோதரர்களை பெயிலில் கொண்டு வருவதற்காக நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்தது அம்பலம் ஆகியுள்ளது. அப்போது இருந்த நீதிபதிக்கு இவர் லஞ்சம் கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

    கர்நாடக சட்டமன்றத்திற்கான தேர்தல் நாளை நடக்க உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே அங்கே வாக்காளர் அடையாள அட்டை விவகாரம் பிரச்சனையை உருவாக்கி உள்ளது. தற்போது புயலை கிளப்பும் வகையில் புதிய பிரச்சனை ஒன்று உருவாகி உள்ளது. பாஜக கட்சிக்கு தலைவலியை உண்டாக்கும் பிரச்சனை.

    Sting operation: Sriramulu struck deal with SC judge to bail Reddy brothers out

    2010 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக பணம் கொடுத்து சுரங்க ஊழல் செய்ததாக, அப்போதைய பாஜக முதல்வர் எடியூரப்பாவின் அமைச்சரவையில் இருந்த ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார். பின் நீண்ட இடைவெளிக்கு பின் அவர் பெயிலில் விடுவிக்கப்பட்டார். தற்போது வரை பாஜக கட்சி இவருக்கும் இவரது சகோதரர் சோமசேகர ரெட்டிக்கும் ஆதரவாக பேசி வருகிறது.

    முக்கியமாக சோமசேகர ரெட்டி தற்போது பெல்லாரி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட உள்ளார். அதேபோல் பெல்லாரி தொகுதி பாஜக எம்பியாக இருக்கும் ஸ்ரீராமுலு காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து பதாமி தொகுதியில் போட்டியிட உள்ளார். தற்போது ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமாக இருக்கும் ஸ்ரீராமுலுதான் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

    ரெட்டி சிறையில் இருந்த போது அவரை பெயிலில் கொண்டு வருவதற்காக ஸ்ரீராமுலு நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணாவிற்கு 500 கோடி கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக மே மாதம் 2010ல் ஸ்ரீராமுலு, சுவாமிஜீ என்ற நபர் ஒருவர், நீதிபதியின் உறவினர் ஒருவர் கூடி விவாதித்து உள்ளனர். அதில் முன்பணமாக 100 கோடியை நீதிபதியின் உறவினர் வாங்கியுள்ளார்.

    இதில் ரெட்டிக்கு பெயில் வழங்கிவிட்டு அதற்கு மறுநாள் நீதிபதி ஓய்வு பெற்றார். தற்போது இந்த லஞ்சம் கொடுத்த விவகாரம் புதிய உருவம் எடுத்துள்ளது. தேர்தலை முன்னிட்டு இந்த லஞ்சம் கொடுத்த விவகாரம் உயிர் பெற்றுள்ளது. சரியாக தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன் ஸ்ரீராமுலு லஞ்சம் கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

    மேலும் இதுகுறித்து இன்னும் நிறைய வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. மேலும் கர்நாடக மக்கள், காங்கிரஸ் கட்சியினர் இந்த வீடியோவை ஷேர் செய்து பாஜகவின் வேட்பாளர் மற்றும் எம்பியான ஸ்ரீராமுலுவை கண்டித்து வருகிறார்கள்.

    English summary
    Just two days before Karnataka goes to polls, the Congress has alleged that the BJP's Sriramulu had allegedly paid a bribe to a Supreme Court judge to bail the Reddys out in the illegal mining case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X