For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயங்கரவாதத்தை முஸ்லிம்களும் வெறுக்கிறார்கள்.. சர்வே

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இஸ்லாம் மதத்தின் பெயரிலான வன்முறை செயல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை பெருமளவிலான முஸ்லிம்கள் நிராகரிக்கவே செய்கிறார்கள் என்று அண்மையில் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறு பெயர்களில் இஸ்லாம் மதத்தின் பெயரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது தொடர்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் பல நாடுகளில் Pew Research Center என்ற நிறுவனம் கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Pew Research Center என்ற நிறுவனம் நடத்திய சர்வே முடிவுகள் இவை:

இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரிப்பு

இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரிப்பு

இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்துள்ளது கவலைக்குரியது என்று லெபனானில் 92%; துனிசியாவில் 80%; எகிப்தில் 75%; பாலஸ்தீனத்தில் 65% ஜோர்டானில் 62%; துருக்கியில் 50% பேர் கூறியுள்ளனர்.

தெற்காசியாவில்..

தெற்காசியாவில்..

இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து தென்னாசியாவில் வங்கதேசத்தில் 69%; பாகிஸ்தானில் 66% பேர் கவலை தெரிவித்துள்ளனர். மலேசியாவில் 63%; இந்தோனேசியாவில் 39% பேர் கவலை தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவில்..

நைஜீரியாவில்..

நைஜீரியாவில் 72%; செனகலில் 46%; இஸ்ரேலில் 84% இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்துள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

அல்கொய்தாவுக்கு ஆதரவு?

அல்கொய்தாவுக்கு ஆதரவு?

அதே நேரத்தில் அல்கொய்தாவுக்கு லெபனானில் 2%; துருக்கியில் 5%; ஜோர்டானில் 11%; எகிப்தில் 15%; துனிசியாவில் 9%; பாலஸ்தீனத்தில் 25% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தென்னாசியாவில்..

தென்னாசியாவில்..

தென்னாசிய நாடுகளான வங்கதேசத்தில் 23%; பாகிஸ்தானில் 12% அல்கொய்தாவை ஆதரிக்கின்றனர். ஆனால் இந்தோனேசியாவில் 15%; மலேசியாவில் 18% அல்கொய்தாவை ஆதரிக்கின்றனர்.

போகோ ஹரம் தீவிரவாதிகள்..

போகோ ஹரம் தீவிரவாதிகள்..

நைஜீரியாவில் விஸ்வரூபமெடுக்கும் போகோ ஹரம் தீவிரவாதிகளை 79% நிராகரிக்கின்றனராம். 10% பேர் தான் ஆதரவு தெரிவித்துள்ளனராம்.

பாகிஸ்தானும் தலிபான்களும்

பாகிஸ்தானும் தலிபான்களும்

தலிபான்கள் இயக்கத்துக்கு பாகிஸ்தானில் 8% மட்டுமே ஆதரவு தெரிவிக்கின்றனராம். 59% எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் 33% பேருக்கு அதுபற்றி எதுவும் தெரியவில்லையாம்.

ஹிஸ்புல்லா

ஹிஸ்புல்லா

இதேபோல் ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கத்துக்கும் மத்திய கிழக்கு மற்றும் தென்னாசிய நாடுகளில் ஆதரவு குறைவாக இருக்கிறது. ஆனால் லெபனானில் ஷியா முஸ்லிம்களிடையே பலமான ஆதரவு இருக்கிறதாம்.

ஹமாஸ்

ஹமாஸ்

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளிலும் லெபனானின் ஷியா பிரிவினரிடத்திலும் ஹமாஸ் இயக்கத்தினருக்கு நல்ல ஆதரவு இருக்கிறதாம்.

இவ்வாறு அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
In a new study released Tuesday, the Pew Global Attitudes Project found that "concern about Islamic extremism is high among countries with substantial Muslim populations
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X