பாட்டு பாடி ஆட்டம் போடும் கமல் எப்படி நாட்டை ஆளமுடியும்?- சு.சுவாமி கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாட்டு பாடி ஆட்டம் போடும் கமல் எப்படி நாட்டை ஆள முடியும் என்று கமலின் அரசியல் பிரவேசம் குறித்து பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர்கள் நாடாள கூடாது என்று ஆரம்பத்தில் இருந்து சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்து வருகிறார். மேலும் நடிகர்கள் முட்டாள்கள் என்றும் தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்திலிருந்தே கமல் மீது கடும் விமர்சனங்களை வைத்து வரும் சு.சுவாமி , கமல் பாஜகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு அவரை முட்டாள் என்றும் முதுகெலும்பில்லாதவர் என்றும் விமர்சித்திருந்தார்.

 ரஜினி குறித்தும் விமர்சனம்

ரஜினி குறித்தும் விமர்சனம்

அரசியல் குறித்து ரஜினிகாந்த் பேசியபோது அவர் அரசியலுக்கு வர தகுதியற்றவர் என்று கூறிய சு.சுவாமி, அவரை ஒருமையில் பேசினார். தற்போது கமல் அரசியலுக்கு வருவது குறித்து பேசி வருகிறார்.

 ரஜினி வந்தால் ஏற்பேன்

ரஜினி வந்தால் ஏற்பேன்

கமல் தனி கட்சி தொடங்கவுள்ளதாகவும், ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கூட்டணிக்கு அழைப்பேன் என்றும் கமல் தெரிவித்திருந்தார்.

 சு.சுவாமி கருத்து

சு.சுவாமி கருத்து

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், அரசியலுக்கு வர துடிக்கும் கமலுக்கு பொருளாதாரத்தில் ஏ, பி, சி, டி கூட தெரியாது. பாட்டு பாடி ஆட்டம் ஆடும் ஒருவரால் நாட்டை ஆள முடியுமா.

 முட்டாள்

முட்டாள்

கமல் ஹாசன் ஒரு அடி முட்டாள். மோசடி ரஜினி ஒரு போதும் அரசியலுக்கு வர போவதில்லை என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Subramanian swamy criticises KamalHassan that how could be the man to rule the TN who sings and dances in the film industry.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற