சு.சாமி, மேரி கோம், சித்து உள்பட 6 பேர் ராஜ்யசபாவுக்கு பரிந்துரை
டெல்லி: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்பட 6 பேரை ராஜ்யசபா நியமன எம்.பி.களாக நியமிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
ராஜ்யசபாவில் மொத்தம் உள்ள நியமன எம்.பி.க்களின் எண்ணிக்கை 12. அதில் தற்போது 7 இடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, மலையாள நடிகரும், பாஜகவின் நட்சத்திர பேச்சாளருமான சுரேஷ் கோபி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பத்திரிக்கையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா, பொருளாதார நிபுணர் நரேந்திர ஜாதவ் ஆகியோரின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எங்கே சித்துவை ஆம் ஆத்மி கட்சி தங்கள் பக்கம் இழுத்து பஞ்சாப் மாநில தேர்தலில் முதல்வர் வேட்பாளராக்கிவிடுமோ என பாஜக அஞ்சுகிறது. இந்நிலையில் தான் பாஜகவை சேர்ந்த சித்துவின் பெயர் நியமன எம்.பி. பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
7வது காலி இடத்தை நிறப்ப பாலிவுட் நடிகர் அனுபம் கேரை பரிந்துரைப்பதா அல்லது பத்திரிக்கையாளர் ரஜத் சர்மாவை பரிந்துரைப்பதா என்று ஆலோசனை நடந்து வருகிறதாம்.
ராஜ்யசபா உறுப்பினர்களான காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர், பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர், நாடகத் துறை பிரபலம் பி. ஜெயஸ்ரீ, கல்வியாளர் ம்ரினால் மிரி, பொருளாதார நிபுணர் பால்சந்திர முங்கேகர் ஆகியோர் மார்ச் மாதம் 21ம் தேதி ஓய்வு பெற்றனர். முன்னதாக தொழில்துறை நிபுணர் அசோக் கங்குலி மற்றும் பத்திரிக்கையாளர் ஹெச்.கே. துவா கடந்த ஆண்டு ராஜ்சபா உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர்.
எங்கே சித்துவை ஆம் ஆத்மி கட்சி தங்கள் பக்கம் இழுத்து பஞ்சாப் மாநில தேர்தலில் முதல்வர் வேட்பாளராக்கிவிடுமோ என பாஜக அஞ்சுகிறது. இந்நிலையில் தான் பாஜகவை சேர்ந்த சித்துவின் பெயர் நியமன எம்.பி. பதவிக்கு பரிந்துரைக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications