தினகரன் லஞ்ச வழக்கு.. சுகேஷ் சந்திரசேகரை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட் அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற்று தர தேர்தல் ஆணையத்துக்கு வழங்குவதற்கு ரூ.1.30 கோடி லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 8 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டுள்ளார்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக சசிகலா, ஓபிஎஸ் தரப்பினரிடம் தேர்தல் ஆணையம் இன்று விசாரணை நடத்தியது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு இருப்பதாக கூறப்படும் சுகேஷ் சந்திரசேகரிடம், தினகரன் ரூ.60 கோடி பேரம் பேசி முன்தொகையாக ரூ.1.30 கோடி கொடுத்ததாக டெல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Sukesh Chandrasekar appeared before Delhi District Magistrate

இதைத் தொடர்ந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த ரூ.1.30 கோடி பணம், 2 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து விசாரணைக்குப் பின்னர் சுகேஷை டெல்லி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு இன்று ஆஜர்படுத்தினர். அப்போது நடைபெற்ற விசாரணையில் சுகேஷை 8 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே கைதான சுகேஷ் சந்திரசேகரரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளை தினகரன் விசாரிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்குப் பின்னர் அவரும் கைது செய்யப்படுவார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sukesh Chandrasekar was arrested by Delhi police who had got bribe from TTV Dinakaran appeared before Delhi District Magistrate Nagpal.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற