For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கறுப்பு பணம் விவகாரம்: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள கறுப்பு பணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Supreme Court rejects Centre’s plea opposing SIT on black money

அந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, 60 ஆண்டுகளாக வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

"வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணம் கொண்டு வரப்பட்டிருந்தால் பொருளாதாரம், தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கும். வருமான வரி விகிதமும் குறைந்திருக்கும்" என்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

English summary
The Supreme Court on Wednesday slammed the Central government for lack of efforts in bringing back the black money stashed in foreign banks and dismissed its plea against the constitution of a special investigation team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X