For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயிகள் தற்கொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கெடு

விவசாயிகள் தற்கொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாயிகள் தற்கொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. விவசாயிகளின் தற்கொலை விவகாரம் மிக கவலைக்குரிய பிரச்சனை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் தற்கொலையை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான நீதிபதிகள் பெஞ்ச், விவசாயிகளின் தற்கொலை விவகாரம் மிக கவலைக்குரிய பிரச்சனை மட்டுமல்லாது நாட்டின் மிக மிக முக்கியமான பிரச்சனை என்று குறிப்பிட்டது.

Supreme court seeks answer from central government about the farmers suicide

நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்திருப்பது கவலை அளிக்க கூடிய விஷயம் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வேதனை தெரிவித்துள்ளது. அப்போது விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று விரிவான பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும்விவசாயிகளின் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை தர வேண்டும் என்றும், 4 வாரங்களுக்குள் இவ்விகாரத்தில் செயல் திட்டத்துடன் கூடிய விளக்கமான பதில் தங்களுக்கு வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளது.

English summary
Supreme court seeks answer from central government about the farmers suicide. and supreme court ordered that within 4 weeks the government should tell the court about the actions taken to stop the suicide of the farmers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X