கல்யாண நேரத்துல பாஸ்போர்ட்டை காணோம்.. உதவி கேட்ட இந்தியர்.. சுஷ்மா சுவராஜின் அதிரடி உத்தரவு!
இரண்டு வாரத்தில் திருமணத்தை வைத்துக் கொண்டு அமெரிக்காவில் தன்னுடைய பாஸ்போர்ட்டை தொலைத்த இந்தியருக்கு பாஸ்போர்ட் கிடைக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி இருக்கிறார்.
டெல்லி: இரண்டு வாரத்தில் திருமணத்தை வைத்துக் கொண்டு அமெரிக்காவில் தன்னுடைய பாஸ்போர்ட்டை தொலைத்த இந்தியருக்கு பாஸ்போர்ட் கிடைக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி இருக்கிறார்.
ஒரு காலத்தில், பாஸ்போர்ட் கிடைக்க ஒரு மாதம், இரண்டு மாதம் என்று காத்திருக்க வேண்டும். அலுவலகம் அலுவலகமாக ஏறி இறங்க வேண்டும். போலீஸ் சோதனைக்கு காத்திருக்க வேண்டும். ஆனால் அதை எல்லாம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எளிதாக்கி இருக்கிறார்.
அதோடு எளிய மக்களும் தொடர்பு கொள்ளும் வகையில் டிவிட்டரில் சுஷ்மா சுவராஜ் மக்களுடன் இணக்கமாக இருக்கிறார். டிவிட்டர் மூலமாக மக்களுக்கு நிறைய உதவிகள் செய்தும் இருக்கிறார்.
|
காணவில்லை
இந்தநிலையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான தேவதா ரவி தேஜா தன்னுடைய பாஸ்போர்ட்டை தொலைத்து இருக்கிறார். இதுகுறித்து அவர் சுஷ்மா சுவராஜிடம் டிவிட்டரில் ''நான் வாஷிங்டனில் என்னுடைய பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டேன். எனக்கு ஆகஸ்ட் 13-15ல் திருமணம் இருக்கிறது. ஆகஸ்ட் 10ல் கிளம்ப வேண்டும். என்னுடைய பாஸ்போர்ட்டை தட்கல் முறையில் கிடைக்க உதவி செய்தால் திருமணத்திற்கு செல்ல முடியும். உங்கள் மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளேன். உதவுங்கள்'' என்றுள்ளார்.
|
உதவி
இதற்கு சுஷ்மா சுவராஜ், ''தேவதா ரவி தேஜா, நீங்கள் முக்கியமான நேரத்தில் உங்கள் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டீர்கள். ஆனாலும் உங்கள் திருமணத்திற்கு நீங்கள் சரியாக செல்லும் படி நாங்கள் உதவுவோம்'' என்றுள்ளார். அதேபோல் இந்திய தூதரகத்திடம் உதவும்படி கட்டளையும் இட்டு இருக்கிறார்.
|
என்ன நடவடிக்கை
இதையடுத்து வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் , தேவதாவிடம், ஒரு மெயில் ஐடியை அளித்து இந்த மெயில் ஐடிக்கு உங்கள், விண்ணப்ப விவரங்களை அனுப்புங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளது.

நல்ல விஷயம்
இந்த நிலையில் அவருக்கு விரைவில் பாஸ்போர்ட் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவருக்கு இன்னும் 5 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். அவர் ஆகஸ்ட் 10ம் தேதி இந்தியா கிளம்பும் 5 நாட்களுக்கு முன்பே பாஸ்போர்ட் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications