அயோத்தி பிரச்சினை பேச்சுவார்த்தைக்கு சு.சாமி மத்தியஸ்தம்.. சுப்ரீம் கோர்ட் சொன்ன யோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராமர் கோயில் பிரச்சினையில் இந்து-முஸ்லிம் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியிடம் சுப்ரீம் கோர்ட் ஒப்படைத்தது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் 6 வருடங்களாக அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கிடப்பிலேயே உள்ளது.

Swamy to negotiate on Ram mandir, Supreme Court

இந்த வழக்கை விரைந்து எடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியன்சாமி கோரிக்கைவிடுத்த நிலையில், தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு, இது மத சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் இரு தரப்பும் பேசி தீர்க்க வேண்டும் என கூறியது.

மனுதாரரான சுப்பிரமணியன் சுவாமியையே, இவ்விவகாரம் பற்றி பேசித் தீர்க்க மத்தியஸ்தம் செய்யும்படி கேட்டுக்கொண்டது சுப்ரீம் கோர்ட். பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் பேச்சுவார்த்தையை நடத்த ஒருவரை நியமிப்பதாகவும் கோர்ட் கூறியது.

இதனிடையே, சு.சாமியோ, இரு மத தலைவர்களையும் அமர வைத்து பேச்சுவார்த்தை நடத்துவது என்பது கஷ்டமான காரியம் என கூறினார். நீதித்துறை வழியாகத்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Supreme Court on Tuesday asked BJP leader Subramanian Swamy to sort out the Ayodhya Ram Temple dispute through negotiations agreed upon by all petitioners.
Please Wait while comments are loading...