கொரோனாவால் பாதிக்கப்பட்டால் நான் மம்தாவை கட்டிப்பிடிப்பேன்.. பாஜக தேசிய செயலாளர் சர்ச்சை பேச்சு
கொல்கத்தா: ஒரு வேளை நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், அப்படியே முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்று பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனுபம் ஹஸ்ரா பாஜகவின் புதிய தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் தெற்கு 24 பர்கானாவில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில்,

"எங்கள் தொண்டர்கள் கொரோனாவை விட பெரிய எதிரியுடன் போராடுகிறார்கள். அவர்கள் மம்தா பானர்ஜியுடன் போராடுகிறார்கள். முகமூடி இல்லாமல் மம்தா பானர்ஜிக்கு எதிராக அவர்கள் (பிஜேபி உறுப்பினர்கள்) அதை எதிர்த்துப் போராட முடிந்தபோது, அவர்களால் முகமூடி அணியாமல் கொரோனாவுக்கு எதிராகவும் போராட முடியும் என்று நினைக்கிறார்கள். "நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால், நான் நேராக சென்று மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மம்தாவின் ஆட்சியில் சிகிச்சை மோசமாக அளிக்கப்படுகிறது. இறந்தவர்களின் உடல்கள் மண்ணெண்ணெய் மூலம் எரிக்கப்படுகின்றன. கொரோனாவால் இந்தவர்களின் முகத்தை கூட பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்கள் . இறந்த பூனைகள் அல்லது நாய்களைக் கூட இப்படி நடத்ததுவது கிடையாது. அதைவிட மோசமாக நடத்துகிறார்கள்" என்றார்.
இவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அனுபம் ஹஸ்ராவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவரது பேச்சு பாஜகவின் மனநிலையை காட்டுகிறது. இதுபோன்ற பைத்தியக்கார பேச்சை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளது.
எனினும் மேற்கு வங்கநில பாஜக தலைமை பாஜகவின் புதிய தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ராவின் கருத்து அவரது சொந்தக்கருத்து என பின்வாங்கிவிட்டது. "இதுபோன்ற கருத்துகளை நாங்கள் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும், "என்று அம்மாநில பாஜக தலைவர் கூறினார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
தேர்தலில் வெறும் 822 வாக்குகள்! ஆனா ஓவர் நைட்டில் நாட்டிலேயே 5வது பெரிய கட்சியாக மாறிய NCPI.. எப்படி -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
ஓவர் நைட்டில் பேமஸான.. அங்கீகாரமே இல்லாத NCPI கட்சி! TMC எம்பிக்கள் என்ன பண்ணியிருக்காங்கனு பாருங்க -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
மம்தாவிற்கு பேரிடி.. 20 அதிருப்தி எம்பிக்கள் "என்சிபிஐ" கட்சியில் ஐக்கியம்.. பின்னணியில் மெகா பிளான் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
மமதாவின் கோட்டை தகர்கிறதா? அதிருப்தி எம்பிக்கள் எடுத்த அதிரடி முடிவு!












Click it and Unblock the Notifications