அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை..சேகர்பாபுவுக்கு கூடுதல் பொறுப்பு
சென்னை: தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களில் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சேகர்பாவுவிற்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர்கள் 34 பேர் ஏற்கனவே உள்ள நிலையில் 35ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த சூழலில் தமிழக அமைச்சர்கள் 10 பேரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளன. சிலருக்குக் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு காதி கிராம நலத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறையும் சுற்றுலா துறை அமைச்சராக அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்து முத்துச்சாமிக்கு கூடுதலாக சில துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை மாற்றம்: யாருக்கு எந்த துறை? கூடுதல் பொறுப்பு யாருக்கு?
அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு அமலாக்கத்துறை ஒதுக்கீடு
அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு
வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், சீர்மரபினர் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம்
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு
விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யானாதன், சுற்றுசூழல் துறை தொடர்ந்து கவனிப்பார்
அமைச்சர் சேகர் பாபுவிடம் கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை ஒதுக்கீடு
அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு
அமைச்சர் ஆர். காந்திக்கு கைத்தறி, ஜவுளித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் வரலாம் என்று கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி தனக்கு வேறு துறை வேண்டும் என்று பல மாதங்களாகவே கோரிக்கை விடுத்து வந்தார். அவருக்கு ஊரக வளர்ச்சித்துறை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் மகிழ்ச்சியடைவார் என நம்பலாம். அதே போல ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications