ஸ்வீட் ஊட்டிய மோடி.. எல்லையில் “சுராங்கனி” பாடிய தமிழ் ராணுவ வீரர்கள்! ரசித்து ட்வீட் போட்ட பிரதமர்
ஸ்ரீநகர்: கார்கில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு இனிப்பு ஊட்டிவிட அவர்கள், சுராங்கனி பாடலை பாடி மகிழ்ந்தனர்.
உலகம் முழுவதும் அக்டோபர் 24 ஆம் தேதியான இன்று இந்து மக்களால் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
புத்தாடைகள், பட்டாசுகள், தீபாவளி பண்டிக்கைக்கு தேவையான உணவு, பூஜை பொருட்களை வாங்குவதற்காக முக்கிய நகரங்களில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

படையெடுக்கும் மக்கள்
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தங்கி பணிபுரிந்து வந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து உள்ளனர். இதனால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் மக்கள் கூட்டம் கடந்த சில நாட்களாகவே அதிகளவில் காணப்பட்டது.

எல்லையில் மோடி
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய எல்லைக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுடன் ராணுவ சீருடை அணிந்து பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இன்று அவர் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி இருக்கிறார்.

கார்கில் தீபாவளி கொண்டாட்டம்
நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி சென்ற அவர் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வான வேடிக்கைகளை கண்டு ரசித்தார். இதனை தொடர்ந்து இன்று ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள கார்கில் நகருக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களுடன் அவர் தீபாவளி கொண்டாடினார்.

பிரதமர் மோடி ட்வீட்
அப்போது ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டி பிரதமர் மோடி மகிழ்ந்தார். அங்கு திரளாக நின்ற தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள், சுராங்கனி என்ற புகழ்பெற்ற தமிழ் பாடலை பாடி மகிழ்ந்தனர். இதனை கண்டு நெகிழ்ச்சியடைந்த பிரதமர் மோடி, அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, "தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications