தெஹல்கா ஆசிரியர் மீதான பாலியல் வழக்கு: ஹாலிவுட் நடிகர் ராப்ர்ட் டி நிரோ வாக்குமூலம்
பானாஜி: தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் ஹாலிவுட் நடிகர் ராப்ர்ட் டி நிரோவிடம் கோவா போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கோவா நகரின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தெஹல்கா புலனாய்வு பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் பங்கேற்க ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நிரோ மற்றும் அவரது மகள் வந்திருந்தனர்.

பார்ட்டி முடிந்ததும் அவர்களை ஹோட்டலில் அவர்கள் தங்கியிருந்த அறையில் விட்டுவிட்டு வருவதற்காக தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் மற்றும் அவருடன் பணியாற்றும் பெண் ஊழியர் ஆகியோர் லிப்ட்டில் சென்றனர். அப்போது பெண் ஊழியரை, தருண் தேஜ்பால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் ஊழியர் அளி்த்த புகாரை தொடர்ந்து தருண் தேஜ்பாலை கைது செய்த கோவா மாநில குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இந்தாண்டு பிப்வரி மாதம் விரைவு நீதிமன்றத்தில் தருண் தேஜ்பாலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் லிப்டில் உடனிருந்ததாக கூறப்படும் ராப்ர்ட் டி நிரோவை சாட்சியாக எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
விசாரணைக்காக தயாரிக்கப்பட்ட கேள்விகளை கடந்த ஜனவரி மாதம்
இமெயில் மூலம் அந்த நடிகருக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதற்கு தற்போது நியூயார்க்கில் இருந்து பதில் அளித்துள்ளார் ராபர்ட். அந்த பதிலில் லிப்டில் புகார் அளித்த பெண்ணும், லிப்டில் உடன் வந்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் பாலியல் பலாத்காரம் நடந்ததா என்பது பற்றி ராப்ர்ட் கூறிய பதிலை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இந்த வழக்கில் ஹாலிவுட் நடிகரான ராப்ர்ட வாக்குமூலம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications