For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்சி நிதிக்காக கூலி வேலை செய்யப்போகும் தெலுங்கானா முதல்வர்!

தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி உதயமான நாளை கொண்டாட தேவையான நிதியை திரட்ட இரண்டு நாட்கள் கூலி வேலை செய்ய முடிவு செய்துள்ளார் தெலுங்கான முதல்வர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி உதயமான தினத்தைக் கொண்டாடுவதற்குத் தேவையான நிதியைத் திரட்ட கூலி வேலை செய்ய முடிவெடுத்துள்ளார் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் இரண்டாக பிரிக்கப்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கான என்ற புதிய மாநிலமாக உருவெடுத்தது. தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பின்பு நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார் சந்திரசேகர ராவ்.

Telangana CM Chandrasekhar Rao (KCR) will be a coolie for two days

தெலுங்கானா மக்களின் மனதில் இடம் பிடித்த சந்திரசேகரராவின் ராஷ்டிரிய சமிதி கட்சி முதல் அரசை அமைத்த பெருமையையும், சிறப்பையும் பெற்றது.

இந்நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி உதயமான தினத்தைக் கொண்டாடுவதற்குத் தேவையான நிதியைத் திரட்ட கூலி வேலை செய்ய முடிவெடுத்துள்ளார் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்.

அதோடு, தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் மூத்தத் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் கூலி வேலை செய்து, பணம் திரட்டி கட்சி நிதிக்காக வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறித்தியுள்ளார்.

இதற்கு காரணம் தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியின் உதயமான நாள் நிகழ்ச்சி இந்த மாத இறுதியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியையொட்டி அதற்கு தேவையான நிதியை இரண்டு நாட்கள் கூலி வேலை செய்து திரட்ட உள்ளதாகவும் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

English summary
Telangana CM and Telangana Rastra Samithi chief K Chandrasekhar Rao (KCR) will be a coolie for two days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X