For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோலர் பவர் பிளாண்ட்: டுவிட்டரிலேயே பேசி முடித்த டெஸ்லா சிஇஒவும் புவேர்ட்டோ ரிக்கோ தீவின் ஆளுநரும்!

சோலர் பவர் பிளாண்ட் மூலம் மின்சாரம் தயாரிப்பது குறித்து டெஸ்லா சிஇஒஎலான் மஸ்க்கும் புவேர்ட்டோ ரிக்கோ தீவின் ஆளுநர் ரிக்கார்டோ ரொலெல்லாவும் டுவிட்டரிலேயே பேசி முடிவெடுத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன

By Suganthi
Google Oneindia Tamil News

சான் ஜுவான்: டெஸ்லா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க்கும் புவேர்ட்டோ ரிக்கோ தீவின் ஆளுநர் ரிக்கார்டோ ரொஸெல்லாவும் டுவிட்டரிலேயே சோலர் பவர் பிளாண்ட் அமைப்பது குறித்து விவாதித்தனர்.

எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். அண்மையில் அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோவில் புயல் வீசியதால் அங்கு மின்சாரம் கிடைப்பது மிகவும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

Tesla CEO and Puerto Rico governor decides solar power plant in Twitter

அதனால் அங்கு சூரியஒளி மூலம் மின்சாரம் அமைக்கும் தொழிற்சாலையை நிறுவி மின்சாரம் வழங்க முடியும் என எலான் மஸ்க் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதனைப் பார்த்த புவேர்ட்டோ ரிக்கோ தீவின் ஆளுநர் வாருங்கள் இதுகுறித்து பேசலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு தொழில் அதிபரும் தீவின் ஆளுநரிடம் டுவிட்டரில் ஒரு திட்டத்தைக் குறித்து விவாதிப்பது ஆக்கப்பூர்வமாக உள்ளது. டெஸ்லா கம்பனி அண்மையில் தான் வீடுகளுக்கு சூரிய கூரை மூலம் மின்சாரம் சேமிக்கும் யூனிட்டை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள மென்பொறியாளர், தொழில் அதிபர் உடன் மஸ்க் டுவிட்டரில் நடத்திய உரையாடல் மூலம் உலகிலேயே மிகப் பெரிய லித்தியம் அயனி பேட்டரியை தெற்கு ஆஸ்திரேலியாவில் நிறுவினார்கள். இதன் மதிப்பு 50 மில்லியன் டாலர். இதன் மூலம் 30, 000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும்.

மஸ்க் அவ்வப்போது இதுபோன்று டுவிட்டரில் இதுபோன்ற பெரிய திட்டங்களை அறிவிப்பதும் செயல்படுத்துவதும் நடந்து வருகிறது. புவேர்ட்டோ ரிக்கோ ஆளுநர் ரிக்கார்டோ ரொஸெல்லா மஸ்க்குக்கு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவின் டா யு தீவில் ஏற்கனவே இதுபோல சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை நிறுவி, அதன் மூலம் மின்சாரத்தை வழங்கி வருகிறது டெஸ்லா நிறுவனம். இந்த திட்டத்தின் மூலம், 3 நாட்களுக்கு சூரிய ஒளி இல்லாவிட்டாலும் கூட மின்சாரம் வழஙக முடியும் எனப்து குறிப்பிடத்தக்கது.

ஹவாய் தீவிலும் இதே போன்ற முயற்சிகளில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இன்னும் மூன்று மாதங்களில் அதனை ஹவாய் தீவில் திறக்க உள்ளது.

English summary
Tesla CEO and Puerto Rico governor have a talk in twitter and decided to install solar power plant
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X