பொருளாதாரம் சரிந்துவிட்டது உண்மைதான்... மோடி அமைத்த குழுவே போட்டு உடைத்தது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி இரண்டு வாரம் முன்பு பொருளாதார ஆலோசனை குழு ஒன்றை அமைத்தார்.

தற்போது பிரதமர் மோடி அமைத்த இந்த பொருளாதார ஆலோசனைக் குழு இந்தியாவின் பொருளாதாரம் சரிந்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த ஆலோசனைக் குழு இந்திய பொருளாதாரத்தை சரி செய்ய பத்து வழிகளை பரிந்துரை செய்துள்ளது.

 சரிந்தது பொருளாதாரம்

சரிந்தது பொருளாதாரம்

இந்தியப் பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இந்த நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு இறுதியில் 6.7 சதவிகிதமா இருக்கும் எனவும் சர்வதேச பொருளாதார நிதியம் தெரிவித்துள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான வளர்ச்சியாகும்.

 பொருளாதார ஆலோசனைக் குழுவை மோடி அமைத்தார்

பொருளாதார ஆலோசனைக் குழுவை மோடி அமைத்தார்

இதையடுத்து மோடி தலைமையிலான மத்திய அரசு மீது நிறைய கண்டங்கள் தெரிவிக்கப்பட்டன. எனவே நிதி நிலைமை குறித்து ஆராய நிதி ஆயோக் உறுப்பினரான பிபேக் தேப்ராய் தலைமையில் 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை பிரதமருக்கு இந்த குழு வழங்கும். இந்த குழுவில் பொருளாதார வல்லுநர்கள் சுர்ஜித் பல்லா, ரத்தின் ராய் இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மெண்ட் ரிசர்ச் பேராசிரியர் அஷிமா கோயல் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

 பொருளாதாரம் சரிந்துள்ளது

பொருளாதாரம் சரிந்துள்ளது

இந்த நிலையில் பிபேக் தேப்ராய் தலைமையிலான இந்த பொருளாதார ஆலோசனைக் குழு தற்போது தனது முதல் கட்ட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையின் விவரங்கள் மிகவும் அதிர்ச்சி தரக் கூடியதாக உள்ளது. இவர்கள் இந்த அறிக்கையில் இந்தியாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் அதிகமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன்படி இந்தியாவின் பொருளாதாரம் சரிந்துள்ளது தெள்ளத்தெளிவாக தெரிய வந்துள்ளது.

 பத்து வழிகள் பரிந்துரை

பத்து வழிகள் பரிந்துரை

அதேபோல் இந்தக் குழு பொருளாதாரத்தை சரி செய்யும் பத்து வழிகளையும் அந்த முதல்நிலை அறிக்கையில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி விவசாயம், நிதிக் கொள்கை, வேலைவாய்ப்பு, கல்வி , பொதுச் செலவு என 10 முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் விரைவில் நமது பொருளாதாரத்தை சரி செய்யலாம் என் கூறியுள்ளது. இது குறித்த விரிவான அறிக்கையை அடுத்த மாதம் தாக்கல் செய்ய இந்தக் குழு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த முதல் நிலை அறிக்கையில் உள்ள விஷயங்களை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது இந்தக் குழு.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The advisory council which created by PM Modi has accepted the slowdown. It also gave 10 rules to get back the proper improvement.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற