பாலம் 10 வருஷம் தாங்கும்ங்க! வாக்குறுதி தந்த பராமரிப்பு நிறுவனம்.. நாலே நாளில் அறுந்து விழுந்த அவலம்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் மோர்பியில் கேபிள் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் 140க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த பாலத்தை பராமரித்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள், பாலம் 8-10 ஆண்டுகள் வரை உறுதியாக இருக்கும் என்று கூறியிருந்தனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதே போல இந்த மொத்த பாலத்தையும் 100% புனரமைக்க வெறும் ரூ.2 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்திருக்கிறது.

விபத்து
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மிக பழமையான கேபிள் பாலம் ஒன்று உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கேபிள் பாலத்தை அம்மாநில அரசு சமீபத்தில் புனரமைத்து கடந்த 26ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று புதியதாக திறக்கப்பட்ட பாலத்தை சுற்றி பார்க்க மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். சுமார் 500க்கும் அதிகமானோர் வந்திருந்த நிலையில் பாலம் திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதில் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் மக்களை மீட்பதற்குள் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கின.

பலி
சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களில் 97 பேர் உயிரற்ற வெறும் உடல்களாக மீட்கப்பட்டனர். இரவு தொடங்கிய மீட்புப்பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தை பராமரிக்க ஒப்பந்தம் செய்த 'ஓரேவா குழுமத்தின்' நிர்வாக இயக்குநர் சமீபத்தில் பாலம் குறித்து அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், "இந்த பாலம் நிச்சயம் அடுத்த 8-10 ஆண்டுகள் வரை தாங்கும்" என்று கூறியிருந்தார்.

பேட்டி
தொடர்ந்து பேசிய அவர், "இந்த பாலம் அதிக தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் இல்லாத காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் மரங்களை கொண்டே பாலம் கட்டப்பட்டுள்ளது. பின்னர் நாங்கள் நவீன கருவிகளை கொண்டு பாலத்தை புனரமைத்தோம். அதேபோல இதில் பயணிக்க விரும்புவர்களுக்கு நுழைவுச் சீட்டும் வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் எண்ணிக்கையையும் எங்களால் கட்டுப்படுத்த முடிந்தது. தற்போது வரை மாலை 6-6:30 மணிவரை மட்டுமே இதில் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பராமரிப்பு
ஆனால் இரவிலும் பயணிகளின் வருகையை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் வந்தன. எனவே விளக்குகளை அமைத்து இரவிலும் பாலத்தை பயன்பாட்டு விட நாங்கள் யோசித்திருக்கிறோம்." என கடந்த 24ம் தேதி ஓரேவா குழுமத்தின் நிறுவனர் ஜெய்சுக்பாய் படேல் குஜராத்தின் உள்ளூர் செய்தி தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்திருக்கிறார். ஆனால் இம்மாதிரியான பாலங்கள் பராமரிக்க குறைந்தபட்சம் 8 மாதங்கள் முதல் அதிகபட்சம் 12 மாதங்கள் வரை ஆகும் என கட்டுமான பொறியாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு இருக்கையில் இந்த பாலம் சுமார் 7 மாதங்கள் வரை புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. பாலத்தை 100 சதவிகிதம் முழுமையாக புனரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகக்குறைந்த தொகை என்றும் பொறியாளர்கள் கூறுகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications