மீட்பு பணிக்கு வந்த கிரேனையே மீட்க வேண்டியதா போச்சே. .ஒடிசாவில் லாரியோடு தலைகுப்புற கவிழ்ந்த கிரேன்

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஆற்று பாலத்துக்குள் விழுந்த லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட கிரேனானது லாரியோடு ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

எங்கு எந்தவொரு அவசரம் என்றாலும் மீட்பு பணியில் முக்கிய இடம்பெறுவது கிரேன் வாகனம் தான். ஏனென்றால் கிரேன் மூலம் மிகப்பெரிய வாகனத்தை கூட தூக்கி விட முடியும்.

குறிப்பாக கிணற்றிலோ, பாலத்திலோ, வாகனங்கள் விழுந்துவிட்டால் கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு பின்னர் ரோப் மூலம் வாகனங்கள் மீடகப்படுவது வழக்கம்.

 மீட்பு பணியில் கிரேன்கள்

மீட்பு பணியில் கிரேன்கள்

அப்படி எவ்வளவு பெரிய வாகனம் என்றாலும் கூட கிரேன்கள் மூலம் எளிதில் மீட்கப்படுகின்றனர். விபத்து சம்பவங்களிலும் கூட கிரேன் வாகனம் தான் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறாக மீட்பு பணியில் முக்கிய பங்காற்றும் கிரேன்களும் ஒருசில நேரங்களில் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அரங்கேறுவது உண்டு. அப்படி தான் ஒடிசா மாநிலத்தின் தகிசர் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட கிரேனையே மீட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆற்றுப்பாலத்துக்கு விழுந்து கிடக்கும் லாரியை மீட்பதற்காக 2 கிரேன்கள் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு கிரேன் லாரியோடு தலைகீழாக ஆற்றுக்குள் பாய்ந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 தீயாய் பரவும் வீடியோ

தீயாய் பரவும் வீடியோ

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், ஆற்றுப்பாலத்திற்குள் ஒரு லாரி விழுந்து கிடக்கிறது. இந்த லாரியை மீட்பதற்காக மீட்பு பணிக்காக அங்கு 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்த கிரேன் ஆபரேட்டர்களும் அந்த லாரியில் ரோப்களை கட்டி லாரியை வெளியே மீட்க முயன்றனர். ஒரு ரோப்பினை ரைட் சைடில் உள்ள கிரேனும் மற்றொரு ரோப்பினை லெப்ட் சைடில் நிற்கும் கிரேனும் பிடித்தப்படி லாரியை ஆற்றுப்பாலத்திற்குள் இருந்து தூக்குகின்றன. லாரியும் கிட்டத்தட்ட பாலத்தின் மேல் பகுதிக்கு வந்துவிட்டது.

 ஆற்றுக்குள் தலைக்குப்புற பாய்ந்தது

ஆற்றுக்குள் தலைக்குப்புற பாய்ந்தது

இந்த நிலையில், இன்னும் சில அடிகள் தூக்கினால் லாரி பாலத்தின் மேற்பரப்பிற்கு வந்திருக்கும். ஆனால் துரதிருஷ்டவசமாக லெப்ட் சைடில் நிற்கும் கிரேனின் ரோப் திடீரென அறுந்து விடுகிறது. இதனால் லாரியின் மொத்த லோடும், ரைட் சைடில் நிற்கும் கிரேன் மீது இறங்கியது. ஓவர் லோட் காரணமாக அந்த கிரேன் அப்படியே மேல் நோக்கி தூக்கி லாரியோடு சேர்ந்து ஆற்றுக்குள் தலைக்குப்புற பாய்ந்தது. கிரேனோடு சேர்ந்து ஆபரேட்டரும் ஆற்றுக்குள் விழுகிறார். எனினும் அவர் சிறிது நேரத்தில் நீச்சல் அடித்து வெளியே வந்து விடுகிறார். இவ்வாறு அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

 வடிவேல் காமெடி பாணியில்

வடிவேல் காமெடி பாணியில்

வடிவேல் காமெடி பாணியில் 'என்னன்னே காப்பாத்துறேன்னு சொல்லிட்டு நீங்களும் உள்ள வந்துட்டீங்க' என்பது போல் லாரியை வெளியே மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட கிரேன் லாரியோடு தலைகீழாக ஆற்றுக்குள் விழுந்த வீடியோ காட்சி நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த வீடியோவுக்கு பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதில் நெட்டிசன் ஒருவர், 'கிரேனோடு சேர்ந்து ஆற்றுக்குள் விழுந்த ஆபரேட்டர் ஆற்றில் நீந்தி வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் மற்றொருவர், இரண்டு கிரேன்களிலும் ரோப் சரியாக கட்டப்பட்டிருந்தால் இவ்வளவு பெரிய சம்பவம் ஏற்பட்டிருக்காது என்றார்.

 நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

மேலும் சிலர் மீட்கும் பணியில் இவ்வளவு அஜாக்கிரதையாக செயல்படுவதா? என மீட்பு பணியில் ஈடுபட்டவர்களை கேட்கும் விதமாக ஆவேசத்துடன் பதிவிட்டிருந்தார். ஏனெனில் ஆற்று தண்ணீர் என்பதால் இவர்களால் வெளியேற முடிந்தது. கால்வாய் அல்லது சாக்கடையாகவோ இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பது போல் பதிவிட்டிருந்தனர். கடந்த புதன்கிழமை இதுபோன்று ஆந்திராவில் 25 அடி உயரத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகி மறுபுற சாலையில் விழுவது போல் நின்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது இந்த வீடியோவும் வேகமாக பரவி வருகிறது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+