தலித் விவசாயிகளை லத்தியால் அடிக்கும் போலீசார்...கதறும் குழந்தைகள்...மபி கொடூரம்!!
குணா: மத்தியப்பிரதேச மாநிலத்தில் தங்களது வயலில் விளைந்து இருக்கும் பயிர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அழிப்பதை தடுத்த தலித் விவசாய தம்பதிகள் மீது போலீசார் லத்தியால் கடுமையாக தாக்கினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி மத்தியப்பிரதேச அரசு மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் குணா என்ற இடத்தில் 5.5 ஏக்கர் நிலத்தில் அஹிர்வார், சாவித்திரி தம்பதிகள் விவசாயம் செய்து இருந்தனர். திடீரென அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் பயிர்களை அழித்தனர். இதற்கு அந்த தம்பதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அங்கு இருந்த போலீசார் அவர்களை கடுமையாக லத்தியால் தாக்கினர்.

இவர்களை தாக்கும்போது அங்கு நின்று கொண்டு இருந்த அவர்களது குழந்தைகள் இதைத் தடுக்க முன் வந்தனர். ஆனால், போலீசார் அவர்களை பிடித்து தள்ளினர். இதையடுத்து அந்த தம்பதிகள், கையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தனர். உடனடியாக இவர்கள் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். தற்போது இருவரும் நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலம் கல்லூரி கட்டுவதற்காக அரசால் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த நிலம் யார் என்பது எங்களுக்குத் தெரியாது, பல ஆண்டுகளாக இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருவதாக அந்த தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலத்தின் பெரும்பாலான பகுதியை காப்பு பார்டி என்பவர் ஆக்கிரமித்து, தனக்கு சொந்தம் செய்து கொண்டதாகவும், இது அரசுக்கு தெரியாமல் இருப்பதற்காக இந்த தம்பதிகளுக்கு ரூ. 3 லட்சம் கொடுத்து இருப்பதாகவும் அந்த பகுதியில் இருந்த மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இங்கு பெரும்பான்மையான இடங்களை காப்பு ஆக்கிரமித்து தனக்கு சொந்தமாக்கி வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தம்பதிகள் மருந்து குடித்தவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். உரிய நேரத்தில் அதிகாரிகள் செயல்பட்டதால் இருவரும் தப்பினர் என்று மாவட்டக் கலெக்டர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இருந்தபோதும், அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ''இவர்களது மனநிலை மற்றும் அநீதிக்கு எதிராக நமது யுத்தம்'' என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். குணா தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியஜோதிராதித்யா சிந்தியா பலமுறை வெற்றி பெற்றுள்ளார்.
हमारी लड़ाई इसी सोच और अन्याय के ख़िलाफ़ है। pic.twitter.com/egGjgY5Awm
— Rahul Gandhi (@RahulGandhi) July 16, 2020
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்த ஜோதிராத்திய சிந்தியா, ''இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. எஸ்பி, கலெக்டர் இருவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
