பாஜக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்பதையே இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது.. ராகுல்காந்தி கருத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil
  இடைத்தேர்தல்களில் சறுக்கிய பாஜக- வீடியோ

  டெல்லி: உத்தரப்பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்பதையே காட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

  உத்தரப்பிரதேசத்தின் புல்பூர் மக்களவை இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்துள்ளது. புல்பூர் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் வெற்றி பெற்றார்.

  The result is clear that the electorate is very angry against the BJP: Rahul gandhi

  சுமார் 59,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கே.எஸ்.பட்டேல் தோல்வியடைந்துள்ளார். இந்த வெற்றியை சமாஜ்வாதி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

  இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது உத்தரப்பிரதேச மக்கள் பா.ஜ.க மீது கோபத்தில் இருப்பது இடைத்தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

  உ.பி.யில் பாஜக மீதான கோபம் காரணமாக மாறுதலுக்காக சமாஜ்வாதி கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என அவர் கூறியுள்ளார். மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலிமையாக கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவோம் என ராகுல் தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Congress leader Rahul Gandhi has said that The result is clear that the electorate is very angry against the BJP and will vote for the non-BJP candidate who is most likely to win. In UP bypoll BJP failed.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற