டிப் டாப் உடை.. 50 ரூபாய் பல்பை திருட 5 லஞ்சம் ரூபாய் காருடன் வந்த திருடர்கள்.. யாரு சாமி இவங்க?
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நள்ளிரவில் சாலை ஓரம் உள்ள கடைகளின் 'பல்புகளை' காரில் வந்து சிலர் திருடி செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரதான சாலையை இருட்டாக்கி அங்குள்ள கடைகளை உடைத்து கொள்ளையடிக்கவே இவ்வாறு பல்புகள் திருடப்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தற்போது இந்த திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.

பல்பு திருட்டு
ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதான சாலைகளில் உள்ள கடைகளில் சமீப நாட்களாக கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இவ்வாறு இருக்கையில், இந்த கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த கடை உரிமையாளர்கள் சிசிடிவி கேமிராக்களை பயன்படுத்த தொடங்கினர். நேற்றைய தினம் கடையின் உரிமையாளர் தனது சிசிடிவி காட்சிகளை பரிசோதித்தபோது அதில் சிலர் காரில் வந்து கடையின் முன் உள்ள பல்புகளை திருடி செல்வது தெளிவாக தெரிந்தது.

சிசிடிவி
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் கடைக்காரர் ஒருவர் கூறியதாவது, "ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவின் நவல்கர் பகுதியில் நாங்கள் கடைகளை வைத்திருக்கிறோம். ஆனால் இந்த பகுதியில் சமீப நாட்களாக சில கடைகள் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் எங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கொள்ளையர்கள் குறித்து தெரிந்துகொள்ள நாங்கள் சிசிடிவி கேமிராக்களை பயன்படுத்த தொடங்கினோம். ஆனால் தற்போது இதிலும் ஒரு சிக்கல் மேலெழுந்துள்ளது.

கடையை திறக்க முயற்சி
அதாவது, கொள்ளையர்கள் அடையாளம் தெரியக்கூடாது என பல்புகளை திருடிவிட்டு பின்னர் கொள்ளையடித்து செல்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நள்ளிரவில் சத்தம் கேட்டு நான் எழுந்தேன். அன்று நான் கடையிலேயே படுத்திருந்தேன். கடையை திறந்த பார்த்தபோது, அங்கு கொள்ளையர்கள் பக்கத்து கடையின் கதவை உடைக்க முயன்றுகொண்டிருந்தனர். நான் இதை பார்த்து சத்தமிட்டேன். உடனடியாக அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆனால் என் கடையில் மாட்டி வைத்திருந்த பல்பு காணவில்லை.

நாற்காலி
இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை பரிசோதித்தபோதுதான் உண்மை தெரியவந்தது. இந்த கொள்ளையர்கள்தான் எனது கடையில் இருந்த பல்புகளை திருடி சென்றுள்ளனர்" என்று கூறியுள்ளார். இந்த சிசிடிவி காட்சிகளையும் அவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். தற்போது இந்த காட்சிகள் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதில் திருடர்கள் பல்புகளை கழற்ற அருகில் இருந்த நாற்காலியை பயன்படுத்தியது தெளிவாக தெரிகிறது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு தற்போது காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications