For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயிருக்கு போராடும் பிறந்து 60 நாளே ஆன குழந்தை: உதவி கேட்டு ஏழை விவசாயி கண்ணீர்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: உயிருக்கு போராடும் பிறந்து 60 நாட்களே ஆன குழந்தையை காப்பாற்ற உதவி கேட்டு மன்றாடுகிறார் ஏழை விவசாயி.

சோம்நாத் பவார் ஒரு விவசாயி. அவர் தனது பெற்றோர், மனைவி, 2 மகள்கள், சகோதரர், சகோதரரின் மனைவி, சகோதரியுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி பவாரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த குழந்தை செப்டம்பர் மாதம் காய்ச்சலால் அவதிப்பட்டது.

மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது கிருஷ்ணாவின் இதயத்தில் பிரச்சனை உள்ளது என்றும் அதனால் அசுத்த ரத்தம் உடலில் கலப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாதக் கணக்கில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ. 3 லட்சம் தேவைப்படுகிறது. வேலைக்கு சென்றால் நாள் ஒன்றுக்கு பவாருக்கு ரூ.100 கிடைக்கும். அந்த பணத்தில் 8 பேர் சாப்பிடுகிறார்கள்.

இந்நிலையில் அவர்களுக்கு இருக்கும் விவசாய நிலத்தை விற்றாலும் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் தான் கிடைக்கும். நிலத்தை விற்றுவிட்டால் அந்த குடும்பத்தின் நிலைமை மோசமாகிவிடும்.

இதுவரை சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் குழந்தையின் சிகிச்சைக்காக செலவு செய்துவிட்டனர். மேலும் தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் வாங்கியுள்ளனர். குழந்தை கிருஷ்ணாவை காப்பாற்ற தாராள மனம் உள்ளவர்கள் உதவி செய்ய வேண்டும் என்று கெஞ்சிக் கேட்கிறார் பவார்.

குழந்தை கிருஷ்ணாவுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் Ketto மூலம் உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் பவார். விரைவில் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் குழந்தையை காப்பாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A poor farmer's son is battling a complex heart problem. He is requesting the kind hearted to save his son.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X